சூர்யா பேசியதில் தவறில்லை.. அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு.. 'பிக்பாஸ் கமல்' குறித்து கிண்டல்
Recommended Video
சென்னை: தேசிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது தவறில்லை என்றும், பிக்பாஸில் இருப்பதால் கமல் 100 நாளைக்கு வெளியே வரமுடியாது என்றும் அதனால் வேலூரில் போட்டியிட்வில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை ராயபுரம் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா நடந்தது. அந்த விழாவில் கலந்துகொண்டு மாணவிகளுடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து இலவச மடிக்கணினிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "தேசிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா கருத்து கூறுவதற்கு ஜனநாயக ரீதியாக உரிமை உள்ளது, அது தவறு இல்லை" என்றார்.

வேலூர் லோக்சபா தேர்தல்
வேலூர் லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாதது குறித்த கேள்விக்கு, பிக் பாஸில் பிசியாக இருப்பதால் 100 நாட்களுக்கு வெளியே வரமுடியாது . அதனால் தான் கமல்ஹாசன் வெளியே வரவில்லை என்றார்.

மொழியை வைத்து வியாபாரம்
முரசொலி தலையங்கம் குறித்து பேசிய ஜெயக்குமார், "திமுக மொழியை வைத்து வியாபாரம் செய்பவர்கள், அண்ணா,எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா வழியில் செயல்படும் நாங்கள் இந்தியை எந்த வகையிலும் நுழைய அனுமதிக்கமாட்டோம்

பத்திரக்கை தர்மம்
நான் திமுகவை பற்றி பேட்டி கொடுப்பதால் பத்திரிக்கை தர்மத்திற்கு மாறாக என்னை முரசொலி தலையங்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்கள்
எங்கள் கொள்கைகளில் நாங்கள் உறுதியாக உள்ளோம், திமுகவை போல் டெல்லிக்கு பாதை பூஜை செய்து நாங்கள் பதவிகளை பெறவில்லை"
என்றார்.

பாஜகவுன் கூட்டணி முறிவா?
தேர்தல் வரை மட்டுமே பாஜகவுடன் கூட்டணி என்று ஒ.எஸ் மணியன் பேசியதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார் 'கூட்டணி குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும்" என்றார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications