"நம்ம அமைச்சரா இது? " ஒத்த போட்டோவை வெளியிட்டு மொத்த பேரையும் தெறிக்க விட்டு.. செம.. செம!
அமைச்சர் ஜெயக்குமார் பளு தூக்கும் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது
சென்னை: "நம்ம அமைச்சரா இது" என்று பார்ப்பவர்கள் எல்லாரும் வாயை பிளக்கிறார்கள்.. அப்படி ஒரு போட்டோவை ட்விட்டரில் போட்டு எல்லாரையும் திக்குமுக்காட வைத்து வருகிறார் அமைச்சர் ஜெயக்குமார்!
Recommended Video
அமைச்சர் ஜெயக்குமாரை பொறுத்தவரை சீரியஸ் & கலகலப்பு கலந்த மனிதர்.. வெகு இயல்பாக பழகுவார்.. எப்போதுமே கேஷூவல் பேச்சுதான்.. துளியும் கெத்து இருக்காது.. அதே சமயம் அரசியல் சம்பந்தமான விஷயங்கள் என்றால் சீரியஸ் ஆகிவிடுவார்.. புள்ளி விவரத்துடன் எடுத்து வைத்து பாயின்ட் பாயின்ட்டாக பேசுவார்!
அதேபோல, எதையாவது வித்தியாசமாக செய்து கொண்டே இருப்பார்.. தீவிரமான கலைப்பிரியரும்கூட.. திடீரென மைக் பிடித்து பாடுவார்.. திடீரென்று ஹைக்கூ எழுதுவார்.. கிரிக்கெட் விளையாடுவார்.. சைக்கிளிங் செய்வார்.. இப்படித்தான் 2 வருஷத்துக்கு முன்பு சென்னையில், உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஆளில்லா விமானம் எனப்படும் டிரோன் டாக்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

டிரோன்
அதில் ஆர்வமுடன் ஏறி உட்கார்ந்து கொண்ட ஜெயக்குமார், அதன் கதவையும் சாத்தி கொண்டு... அந்த விமானத்தையே சுற்றுமுற்றும் பார்த்தார்.. பிறகு அந்த விமானம் தயாரிக்கப்பட்ட விதத்தை அங்கிருந்தோரிடம் கேட்டறிந்தார். அப்போதுதான் அது நடிகர் அஜீத் தயாரித்தது என்று தெரியவந்தது. உடனே அமைச்சர், "அஜீத் என்ன இவ்வளவு திறமைசாலியா இருக்கிறாரே" என்று ஆச்சரியப்பட்டார்.

நம்பிக்கை
கடைசிவரை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் என்பதும், பச்சையப்பன் காலேஜிலும், சென்னை சட்டக்கல்லூரியிலும் படித்தவர் என்பதும் நம் அனைவருக்கும் தெரியும் என்றாலும், இவர் ஸ்கூல் படித்தபோது எப்படி இருந்தார், என்ன செய்தார் என்பது யாரும் அவ்வளவாக அறியாதது!

வைரல்
அந்த வகையில், இப்போது ஒரு போட்டோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஜெயக்குமார் வெளியிட்டுள்ளார்... அவர் ஸ்கூல் படிக்கும்போது எடுத்த போட்டோவாம் இது.. பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுத்த போட்டோவை வெளியிட்டு, "பள்ளியில் பளு தூக்கும் போட்டியில் பங்கு கொண்டபோது. #நினைவுகள் #உடல்பலமே மனபலம்" என்று அதற்கு ஒரு கேப்ஷனும் தந்துள்ளார்.

ஸ்வீட் ஷாக்
பிளாக் & ஒயிட்டில் இருக்கிறது அந்த போட்டோ.. நிஜமாகவே கையில் பளு தூக்கி கொண்டு நிற்கிறார்... தலையில் அப்போதும் முடி குறைவாகவே காணப்படுகிறது.. ஆனால், இவர் பளு தூக்குவதை பார்த்த எல்லாரும், "நம்ம அமைச்சரா இது" என ஸ்வீட் ஷாக் ஆகி வருகின்றனர்.

சூப்பர் ஸார்..
இந்த போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலாகியும் வருகிறது.. இதை பார்த்த ட்விட்டர்வாசிகள், "சார்.. பேசாம நீங்க பளுதூக்கும் போட்டிக்கே போயிருக்கலாம்! இந்தியருக்கு ஒரு தங்கம் ஆச்சும் கிடைச்சிருக்கும்!!" என்றும், "செம சார்.. கலக்கறீங்க" என்றும் பாராட்டி தள்ளி கொண்டிருக்கிறார்கள்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications