கொரோனாவில் இருந்து மீண்டார் அமைச்சர் காமராஜ் - நலமுடன் வீடு திரும்பினார்
கொரேனாவில் இருந்து மீண்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
சென்னை: கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். அமைச்சரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஜனவரி 5ஆம் தேதி சென்னை ராமாபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மூச்சுத்திணறல் அதிகம் காணப்பட்டதால் 20ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அமைச்சர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் தொடர்ந்து அவருக்கு மூச்சுத்திணறல் அதிகரித்தது. இதனையடுத்து அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் குழுவினர் முடிவு செய்தனர். உடனடியாக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அமைச்சர் காமராஜ் கொண்டு செல்லப்பட்டார்.

படிப்படியாக அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஒருமாத காலம் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அமைச்சர் காமராஜ் முழுமையாக கொரோனாவில் இருந்து மீண்டார். இதனை மருத்துவமனை நிர்வாகம் நேற்று தெரிவித்தது.
மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் ஒரு மாதம் தொடர் சிகிச்சையில் இருந்த அமைச்சரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் நலமடைந்த அமைச்சர் காமராஜ் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். அமைச்சர் காமராஜ் மறுபிறவி எடுத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications