தொடங்கிய அமைச்சரவை மாற்றம்?அமைச்சர் கயல்விழிக்கு வாரிய தலைவர் பதவி! விரைவில் மந்திரி பதவி பறிப்பு?
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தான் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழிக்கு வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர் அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யபடலாம் என செய்திகள் வரும் நிலையில் இந்த புதிய பொறுப்பு வழங்கி இருப்பது அமைச்சரவை மாற்றத்துக்கான செயல்பாடு தொடங்கிவிட்டதை காட்டும் வகையில் உள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து திமுக தலைவராக இருந்த முக ஸ்டாலின் முதல்வரானார். அவரது தலைமையில் அமைச்சரவை அமைக்கப்பட்டது. அதன்பிறகு சிறிது நாட்களில் அமைச்சர்களின் துறைகள் மட்டும் மாற்றம் செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த ஆண்டு அமைச்சரவையில் புதிதாக முதல்வர் ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் புதிதாக சேர்த்து கொள்ளப்பட்டார். அவருக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை ஒதுக்கப்பட்டது. இதுதவிர சில அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டன.
இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் தற்போது புதிதாக மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழ்நாட்டில் திமுக அரசு அமைந்து 2 ஆண்டுகள் நிறைவு பெற்று 3வது ஆண்டு தொடங்கி உள்ள நிலையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய அமைச்சர்களின் செயல்பாடுகளை பொறுத்து இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளது. அதோடு சரியாக செயல்படாத அமைச்சர்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதில் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் தான் தமிழ்நாடு அமைச்சரவையில் எப்போது வேண்டுமானாலும் மாற்றம் நிகழலாம் என கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தற்போது தாராபுரம் தொகுதி எம்எல்ஏவும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழிவுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதாவது அமைச்சராக இருக்கும் கயல்விழிக்கு தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதான் தற்போது பேசு பொருளாக உள்ளது.
அதாவது தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்வதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏனென்றால் தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் என்ற செய்தி வெளியானது முதல் கயல்விழியிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கிடையே தான் கயல்விழிக்கு வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பொதுவாக வாரிய தலைவர் பதவி என்பது அமைச்சரவையில் இடம் கிடைக்காதவர்களை சமாதானம் செய்யும் வகையில் வழங்கப்படும் பொறுப்பாகும். இந்நிலையில் தான் அமைச்சராக இருக்கும் கயல்விழி தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரியத்தின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கயல்விழியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யபட உள்ளது உறுதியாகி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அமைச்சராக இருக்கும் கயல்விழி தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரியத்தின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் 14 புதிய அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் 12 அலுவல் சாரா உறுப்பினர்களையும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
திருவாடானை தொகுதியில் களமிறங்கும் திமுக? MLA சீட் ரேஸில் யார்? -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications