திமுக ஆட்சியிலாவது.. ராமஜெயம் கொலை வழக்கு விசாரிக்கப்படுமா.. மு.க. ஸ்டாலின் உத்தரவிடுவாரா..?
கேஎன் நேரு சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு விசாரிக்கப்படுமா?
சென்னை: அமைச்சர் கேஎன் நேருவின் சகோதரர் ராமஜெயம் அதிமுக ஆட்சியின்போது கொலை செய்யப்பட்டார்.. இவரை கொன்றவர்கள் மீது இந்த ஆட்சியிலாவது கைது செய்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் நடந்த கொலை வழக்குகளில் மிக முக்கியமான ஒன்று ராமஜெயம் கொலை வழக்கு.. இவர் அமைச்சர் நேருவின் தம்பி ஆவார்.
2012ம் ஆண்டு மார்ச் மாதம், 28ம் தேதி விடிகாலை ராமஜெயம் கொலை செய்யப்பட்டார்.. அவர் கொல்லப்பட்டபோது, அவரது உறுப்பு அறுக்கப்பட்டு, வாயில் திணிக்கப்பட்ட கொடூர நிலையில் காணப்பட்டது...

கொடூரம்
நேருவின் வலதுகரமாக இயங்கிவந்தவர்தான் ராமஜெயம்.. இந்த கொலை நேரு குடும்பத்தையே நிலைகுலைய வைத்தது.. தமிழகத்தையும் அதிர செய்தது.. இதில் சசிகலா ஆதரவாளர்கள் பெயரும் அடிபட்டது.. மேலும் ராமஜெயத்துடன் தொடர்பில் இருந்த அத்தனை பேரும் விசாரணை வளையத்துக்குள்ளும் கொண்டு வரப்பட்டனர்.

விசாரணை
இந்த கொலை குறித்து, ஆரம்பத்தில் திருச்சி மாநகர போலீசார் ஆராய்ந்தனர். அடுத்ததாக சிபிசிஐடி ஆராய்ந்தது. பிறகு சிபிஐ கையில் எடுத்தது.. ஆனால், இதில் பல்வேறு தகவல்கள் வெளிவந்தன என்றாலும், கொலை குற்றவாளிகள் யாருமே கைது செய்யப்படவில்லை. 10 வருடம் அதிமுக ஆட்சியில் இருந்ததால், இந்த கொலை வழக்கு சம்பந்தமாக யாருமே கைது செய்யப்படவில்லை..

அதிமுக
அத்துடன் இது சம்பந்தப்பட்ட வழக்கும் கிடப்பில் போடப்பட்டது. ராமஜெயத்தை கொன்றவர்களை கைது செய்ய ஜெயலலிதா ஆர்வம் காட்டவில்லை என்றே காரணம் சொல்லப்பட்டது. இப்போது 10 வருடத்துக்கு பிறகு திமுக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.. இதையடுத்து, படுகொலைக்கு காரணமான கொலையாளிகள் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை ராமஜெயம் குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் நேரு
இந்த முறை கேஎன் நேரு மறுபடியும் அமைச்சராகியிருப்பதால், இந்த வழக்கின் விசாரணை துரிதப்படுத்தப்படும் என்றே தெரிகிறது.. ராமஜெயம் கொலைக்கு ஒரு நியாயம் கிடைக்கும் என்றே கருதப்படுகிறது. ஆனால், இந்த கொலை வழக்கு குறித்த விசாரணைக்கு முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்..

அமைச்சர்கள்
"அதிமுக அமைச்சர்களின் ஊழல் வழக்குகளை தூசி தட்டி எடுத்து, சட்டத்தின் முன் நிறுத்துவேன்" என்று தன்னுடைய ஒவ்வொரு பிரச்சாரத்தின்போது ஸ்டாலின் சொல்லி வந்த நிலையில், நேருவின் தம்பி கொலை வழக்கினை அவ்வளவு எளிதாக விட்டு விட மாட்டார் என்றும், விரைவில் இதற்கான உத்தரவு வரும் என்றும் நேரு ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications