பொறுமையா இருங்க மக்களே..! போக போக தானா தெரியும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் தற்போது பின்பற்றப்படும் வரும் ஞாயிறு முழு ஊரடங்கின் மூலம் கொரோனா பாதிப்பை படிப்படியாகக் குறைக்க முடியும் எனவும் இதன் பலன் மெதுவாக தெரியவரும் என தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஓமிக்ரோன் உருமாறிய வகை வைரஸ் காரணமாக மூன்றாவது அலை தொடங்கியுள்ள நிலையில் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

தமிழகத்தில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது அங்கு மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினசரி பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஞாயிறு ஊரடங்கு

ஞாயிறு ஊரடங்கு

இந்நிலையில் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது கட்டுப்பாடுகளை அதிகரிக்கா விட்டால் கொரோனா மேலும் அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி முதல் இரவு பத்து மணியிலிருந்து காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

முடங்கிய மக்கள்

முடங்கிய மக்கள்

இதன்படி இன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் ஊரடங்கு காரணமாக காய்கறிகள் இறைச்சி கடைகள் ஜவுளிக்கடைகள் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. ஹோட்டல்களில் பார்சல் சேவை மட்டும் வழங்கப்படும் நிலையில் தமிழகம் முழுவதும் கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் பணியில் 60 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளின் மூலம் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைக்க முடியும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

மா.சுப்பிரமணியன் பேட்டி

மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தற்போது தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் மூலம் அவற்றை படிப்படியாக குறைக்க முடியும் எனவும், ஊரடங்கின் பலன் மெதுவாகத் தான் தெரியவரும் என கூறினார். மேலும் மக்கள் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டியது அவசியம் எனவும் கொரோனாவும் பரவி வருவதால் மக்கள் கூடுதல் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் எனவும் தற்போது போடப்பட்டுள்ள ஞாயிறு முழுவதும் அங்கு தற்போதைய சூழலில் அவசியமாக உள்ளது எனக் கூறினார்.

முகக்கவசம் அவசியம்

முகக்கவசம் அவசியம்

பிப்ரவரி மாதம் வரை கொரோனா பாதிப்பு அதிக அளவில் இருக்கும் என மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்து உள்ள நிலையில் தற்போதைய நிலை அதை உறுதி செய்யும் வகையில் இருப்பதாகவும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வரும் நிலையில் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் முழு ஊரடங்கு விதிக்கக் கூடாது என்பதே நிபுணர்களின் கருத்தாகும் அரசின் கருத்தாகவும் உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+