சென்னையில் 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது! ஒரே இரவில் தட்டி தூக்கிய காவல்துறை! அதிரடி நடவடிக்கை!
சென்னை: போதைப்பொருள் விற்பனை, சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நேற்றிரவு காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இதில் சென்னை முழுவதும் 100க்கும் அதிகமான ரவுடிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் புதியதாக பொறுப்பேற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு, குற்றங்களை குறைக்க தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை மாநகரக் காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், தி.நகர், அடையாறு, வட சென்னை, மத்திய சென்னை என சென்னை முழுவதும் உள்ள அனைத்து காவல் மாவட்டங்களிலும் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை சிறப்புச் சோதனை நடத்தப்பட்டது.
இதில், நீண்ட நாட்களாகக் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் மற்றும் தலைமறைவாக இருந்த ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்கள் இருக்கும் இடங்களை ரகசியமாகக் கண்காணித்து இந்த ஆபரேஷன் நடத்தப்பட்டது.
கைது நடவடிக்கை
ஒரே இரவில் சென்னை முழுவதும் 100-க்கும் மேற்பட்ட பழைய குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் தட்டித் தூக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தி.நகர் மற்றும் அடையாறு பகுதிகளில் மட்டும் 34 ரவுடிகள் வரை பிடிபட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து அரிவாள்கள், கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஸ்பெஷல் டிரைவின் போது ரவுடிகள் வேட்டை மட்டுமன்றி, சட்டவிரோதமாகக் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பல்களும் கண்டறியப்பட்டு அவர்கள் மீதும் கடுமையான வழக்குகள் பாய்ந்துள்ளன.
நோக்கம் இதுதான்
சென்னையில் குற்றச்செயல்கள் மற்றும் ரவுடியிசத்தை முற்றிலுமாக ஒடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளியே வந்துவிட்டு, நீதிமன்ற விதிகமுறைகளைப் பின்பற்றாமல் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடத் திட்டமிட்ட பல ரவுடிகள் இந்த வேட்டையில் சிக்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications