நின்றால் குத்தம்.. நடந்தால் குத்தம்.. கூட்டணி கட்சிகளிடம் பாய்ந்த விஜய்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எங்க கூட்டணியில் இருக்கீங்க.. அமைச்சர் பதவி எல்லாம் கொடுத்து இருக்கோம்.. ஆனால் எங்களையே விமர்சனம் செய்கிறீர்கள்.. என்று கூட்டணி கட்சியினரிடம் விஜய் கொதித்து போய் ரியாக்சன் கொடுத்து இருக்கிறாராம். அப்படி ஏன் கோபப்பட்டார் என்று கேட்டதற்கு கோட்டை வட்டாரத்தில் நிறைய விஷயங்களை சொல்கிறார்கள்..

சமீபத்தில் தமிழ்நாடு சட்டசபையில் விஜய் கடுமையாக பேசி இருந்தார். கடந்த ஆட்சியில் டாஸ்மாக் மூலம் கட்சி நிதி (Party Fund) பெற்று ஆட்சி நடத்தினார்கள்; அதை நாங்கள் தற்போது நிறுத்தியிருக்கிறோம்.

vijay tvk

சிலர் நான் ஏதோ ஷூட்டிங்கில் இருந்து நேராக சட்டசபைக்கு வந்து முதலமைச்சர் ஆனது போல ஒரு பிம்பத்தை (Image) கட்டமைக்க முயல்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான் - இது வெறும் ரீல் கிடையாது, ரியல்! நான் சினிமாவில் அரசியலைப் பேசியதாலேயே எனது திரைப்படங்கள் சந்தித்த, இப்போதும் சந்தித்து வருகிற நெருக்கடிகளும் சிக்கல்களும் ஒட்டுமொத்த தமிழகமும் அறிந்ததுதான். நடிகனாக வாழ்க்கையைத் தொடங்கினாலும், பல நிலைகளைக் கடந்து, மக்களின் இதயங்களில் இடம் பிடித்துத்தான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். 1990-களிலேயே ரசிகர் மன்றமாக இருந்த காலத்திலேயே நாங்கள் மக்களுக்குத் துணையாக நின்றவர்கள்

நான் எல்லாம் கொளத்தூரில் கொஞ்ச நேரம் பேசியதற்கே நிலைமை மாறிவிட்டது. என்னை மீண்டும் மீண்டும் பேசு என்றால் என்ன ஆகும் என்று தெரியாது என்று விஜய் கூறி இருந்தார். இதோடு அப்பா கதை ஒன்றையும் கூறி இருந்தார். அதோடு அப்பாவை காணோம் என்று கையை காட்டி பேசினார். அதோடு நிற்காமல் ஒரே ஒரு ஆக்சன் மட்டும் செய்துகொள்கிறேன் என்று கூறி.. கையை வைத்து ஸ்டாலின் போல ஆக்சனும் செய்துகாட்டினார். இதெல்லாம் தேசிய அளவில் டிரெண்டானது.

கூட்டணி கட்சிகள் விமர்சனம்

இதை கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. சிபிஎம், சிபிஐ, விசிக என்று அனைத்து கூட்டணி கட்சிகளும் கடுமையாக விமர்சனம் செய்தன. அதிலும் சில கட்சிகள் இதை நேரடியாக முதல்வர் விஜயிடம் கொண்டு சென்றுள்ளன. அதில்.. நீங்கள் இப்படி எல்லாம் செய்ய கூடாது. சினிமா வேறு. ஆட்சி வேறு. பிரச்சார பாணியில் சட்டசபையில் பேசக் கூடாது.

அதோடு ஸ்டாலின் உங்களைப் பற்றி இப்படி எல்லாம் பேசியதே கிடையாது. ஆனால் நீங்கள் பேசுகிறீர்கள். அது தவறு. முக்கியமாக ஸ்டாலின் போல ஆக்சன் செய்வது எல்லாம் தவறு.. அது அரசியல் முதிர்ச்சியின்மை கிடையாது. இப்படி எல்லாம் பேசுவது இப்போது வேண்டுமானால்.. ரீல்ஸ் போட நன்றாக இருக்கும்.. ஆனால் நிலைமை எப்போது வேண்டுமானாலும்.. எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்று கண்டித்து இருக்கிறார்கள்.

கடுப்பான விஜய்

இதை கேட்டுத்தான் விஜய் கடுப்பானதாக கூறப்படுகிறது. நான் நின்றால் குத்தம்.. நடந்தால் குத்தம் என்று சொல்வது சரியாக இருக்காது.. எங்க கூட்டணியில் இருக்கீங்க.. அமைச்சர் பதவி எல்லாம் கொடுத்து இருக்கோம்.. ஆனால் எங்களையே விமர்சனம் செய்கிறீர்கள்.. என்று கூட்டணி கட்சியினரிடம் விஜய் கொதித்து போய் ரியாக்சன் கொடுத்து இருக்கிறாராம்.

கூட்டணி கட்சிகளை நீண்ட காலம் நம்ப முடியாது. நாமே சொந்தமாக நிற்க வேண்டும். அப்போதுதான் முடிவுகளையும் எடுக்க முடியும். அதனால் அதற்கு ஏற்றபடி காய்களை நகர்த்த வேண்டும். இடைத்தேர்தலில் தனி மெஜாரிட்டி பெற முயற்சிகளை செய்ய வேண்டும் என்று விஜய் காய் நகர்த்தி வருகிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+