வெளியே தலைகாட்டாத ஜான் ஆரோக்கியசாமி.. இப்போது திடீர்ன்னு வந்து இருக்காரே.. பெரிய ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி திடீரென கட்சி நிகழ்வுகளில் தலைகாட்ட தொடங்கி உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒருவர் ஜான் ஆரோக்கியசாமி. அவரின் ஆலோசனைகள்தான் கட்சியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றது. தவெக-வின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னால் இருந்த 'சைலண்ட் ஆபரேஷன்' முழுவதும் ஜான் ஆரோக்கியசாமியின் துல்லியமான திட்டமிடல்தான். வாக்குச்சாவடி மட்டத்தில் இருந்து தொடங்கி, சமூக ஊடகங்கள், பிரச்சார உத்திகள், வாக்குறுதிகள் வரை அனைத்தையும் அவர் மாஸ்டர் பிளானாக வடிவமைத்தார்.

vijay tvk

ஜான் ஆரோக்கியசாமி தவெக ஆலோசகர்

புதிய கட்சி ஒன்றை 2 வருடத்தில் ஆட்சியை பிடிக்க வைக்க காரணமாக அமைந்தது ஜான் ஆரோக்கியசாமியின் ஆலோசனைகள்தான்.

ஆனால் அப்படிப்பட்ட ஜான் ஆரோக்கியசாமி பொதுவாக பப்ளிசிட்டி விரும்பும் நபர் கிடையாது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி பொதுவாக வெளியே தலைகாட்டவே மாட்டார். ஜான் ஆரோக்கியசாமி தவெக ஆலோசகராக இருந்த போதும் சரி.. அதற்கு முன்பும் சரி பெரிதாக தலைகாட்டியதே இல்லை.

பின்னால் இருந்து பணிகளை செய்வார்கள்

இவருக்கு ஆலோசனை செய்வதோடு பணிகள் முடிந்துவிடும். முக்கியமாக இவர்க்கு பதவிகள் கூட கிடைக்காது. பொதுவாக ஆலோசகர்கள் இதேபோல்தான் பின்னால் இருந்து பணிகளை செய்வார்கள். பிரஷாந்த் கிஷோர் மட்டுமே பொதுவாக வெளியே வந்து பேட்டி கொடுப்பார், போஸ்டுகளை மேற்கொள்வார், ஆலோசனைகளை செய்வார். அதன்பின் கட்சியும் தொடங்கினார்.

ஆனால் சுனில் கனகூலு தொடங்கி ஜான் ஆரோக்கியசாமி வரை பொதுவாக அரசியல் ஆலோசகர்கள் வெளியே தலைகாட்டவே மாட்டார்கள். கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்ள மாட்டார்கள். ஜான் ஆரோக்கியசாமி தவெக ஆலோசகராக இருந்த போதும் சரி.. அதற்கு முன்பும் சரி பெரிதாக தலைகாட்டியதே இல்லை.

வெளியே வந்து இருக்கிறார்

ஆனால் இப்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி திடீரென கட்சி நிகழ்வுகளில் தலைகாட்ட தொடங்கி உள்ளார். திடீரென கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்ள தொடங்கி உள்ளார். நேற்று வைகோ உள்ளிட்ட மதிமுக தலைவர்களை தவெக தலைவர்கள் சந்தித்தனர். இந்த சந்திப்பில் ஜான் ஆரோக்கியசாமி கலந்து கொண்டார்.

மதிமுக மீட்டிங் ஜான் ஆரோக்கியசாமி

இவருக்கு வைகோ மாலை அணிவித்து வரவேற்பு கொடுத்தார். முதல்முறையாக நேரடியாக ஒரு அரசியல் நிகழ்வில் கலந்து கொண்டு உள்ளார் ஜான் ஆரோக்கியசாமி . இதன் மூலம் ஜான் ஆரோக்கியசாமி நேரடியாக அரசியலில் ஈடுபட தயாராகிவிட்டாரா? அரசியல் ஆலோசகர் என்ற பணியை தாண்டி.. நேரடியாக அரசியலில் பதவிகளை பெற இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜான் ஆரோக்கியசாமிக்கு விஜய் அறிவுரை

ஜான் ஆரோக்கியசாமிக்கு ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் ஆலோசகராக செயல்படும் வாய்ப்பு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த தேர்தலில் வேலை பார்க்க ஜான் ஆரோக்கியசாமி அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நீங்கள் காங்கிரஸ் கட்சிக்கு வேலை செய்யுங்கள், காங்கிரஸ் கட்சியை தேசிய அளவில் வெற்றிபெற வைப்பதற்கான பணிகளை செய்யுங்கள் என்று ஜான் ஆரோக்கியசாமிக்கு விஜய் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் ஜான் ஆரோக்கியசாமி முதல்முறையாக வெளியே தோன்றி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+