Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண்கள் வேலை பார்ப்பது குறைந்ததால் சிசேரியன் அதிகரிப்பு.. சொல்வது சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுகப் பிரசவங்கள் வெகுவாகக் குறைந்து, சிசேரியன் அதிகரிக்க காரணம் பெண்களுக்கு பணிச்சுமை குறைந்து உள்ளதுதான் எனக் கூறியுள்ளார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். மேலும், சமூக வலைதளங்களை மக்கள் அதிக அளவில் பயன்படுத்துவதால் அதன் மூலம் அரசு மருத்துவ சேவைகளை விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைத்திட வல்லுநர்களின் உரையுடன் பயிலரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் சுப்ரியா சாகு உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

Ma Subramanian Chennai Tamil nadu

சிசேரியன் அதிகரிக்க காரணம்: இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "20 ஆண்டுளுக்கு முன்பு பெண்கள் அதிக அளவில் வேலைகளை செய்ததால் அதிகளவில் சுக பிரசவம் நிகழ்ந்தது. ஆனால் கால மாற்றத்தால் தற்போது உள்ள பெண்களுக்கு பணிச்சுமை பெருமளவில் குறைந்து உள்ளதால் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறுவது அதிகரித்துள்ளது.

கேரளாவில் மகப்பேறு இறப்பு விகிதம் ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 18 என்ற அளவில் உள்ளது. அவர்களை விட மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க வேண்டும் என்பதே நோக்கம். மகப்பேறு மருத்துவமனையில் உள்ள தாய்மார்களுக்கு உடற்பயிற்சி யோகா பயிற்சி அளிக்கும் திட்டம் பலனளித்துள்ளது. யோகா பயிற்சி, மூச்சு பயிற்சி போன்றவற்றை ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கி வருகிறோம்.

தமிழ்நாட்டில் தான் சிறந்த மகப்பேறு மருத்துவர்கள்: சுகப் பிரசவங்கள் மாநிலம் முழுவதும் அதிககரிக்க வேண்டும் என கூறியிருக்கிறோம். இந்தியாவில் சிறந்த மகப்பேறு மருத்துவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள். மருத்துவர்கள் சமூக வலைதளங்கள் வழியே அரசு மருத்துவமனை சேவைகளை பிரபலப்படுத்த வேண்டும். சமூக வலைதளங்களை மக்கள் அதிக அளவில் பயன்படுத்துவதால் அதன் மூலம் அரசு மருத்துவ சேவைகளை விளம்பரப்படுத்த வேண்டும்." எனத் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் மகப்பேறு மரண விகிதம் கடந்த ஆண்டு ஒரு லட்சம் பிறப்புகளில் 54 ஆக இருந்தது. அது தற்போது 44.5 ஆக குறைந்துள்ளது. சென்னையில் உள்ள மகப்பேறு மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது மத்திய அரசு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் யோக பயிற்சி வழங்க அறிவுறுத்தியுள்ளது.

அரசு மருத்துவமனைகளில்: சுகப்பிரசவத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மகப்பேறு மரண விகிதம் பூஜ்ஜியத்தை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் விருதுநகர் மாவட்டத்தில் மகப்பேறு மரணம் பூஜ்ஜியத்தை எட்டியுள்ளது. தாய்மார்களுக்கான மருத்துவ கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 99.9 % பிசரவங்கள், மருத்துவமனைகளில் நடைபெற்று வருகிறது. இதில் 59% பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 8.70 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகிறது. இதில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 5.04 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. 3.87 லட்சம் தனியார் மருத்துவமனைகளில் பிரசவங்கள் நடைபெறுகிறது." என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+