என்னங்க இவர்.. வேலையிலும் ஓடுராரு.. சாலையிலும் ஓடுராரு.. மலையிலும் ஓடுராரே.. செம மா.சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொன்னமடையின் வள்ளிமலைப் பகுதியில் ஓட்டப் பயிற்சியை மேற்கொண்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    என்னங்க இவர்.. வேலையிலும் ஓடுராரு.. சாலையிலும் ஓடுராரு.. மலையிலும் ஓடுராரே.. செம மா.சு

    மா சுப்பிரமணியன் எப்போதும் உடல்நலனில் அக்கறை கொண்டவர். இன்று வரை யோகா, உடற்பயிற்சிகளை தவறாமல் செய்து வருபவர். அது போல் இவர் ஸ்டாலினுடன் சேர்ந்தும் நடைப்பயிற்சிகளை மேற்கொள்வது வழக்கம்.

    இவர் பல மாரத்தான்களில் ஓடியுள்ளார். இத்தனை வயதிலும் மிகவும் திறம்பட செயல்படும் இளைஞராகவே திகழ்கிறார். பொதுவாக வயது என்பது வெறும் எண் என சொல்வார்கள். அது இவருக்கு சிறப்பாக பொருந்தும்.

    சித்த மருத்துவ வார் ரூம்

    சித்த மருத்துவ வார் ரூம்

    கடந்த மாதம் சென்னையில் சித்த மருத்துவ கட்டளை மையத்தை பார்வையிட்டு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கண்காட்சியில் அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அப்போது யோகா மாணவி ஒருவர் யோகா செய்ய ஆயத்தமானார். உடனே மா சுப்பிரமணியனும் தரையில் படுத்துக் கொண்டார்.

    தலைகீழாக யோகா

    தலைகீழாக யோகா

    பின்னர் தலைகீழாக காலை தூக்கி யோகா செய்தார். இது இடுப்பில் உள்ள தசை பகுதியை குறைக்கும் ஆசனமாகும். உடனே அங்கிருந்தவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். அது போல் கொரோனா காலத்தை சிறப்பாக கையாள சுகாதாரத் துறையை மா சுப்பிரமணியனிடம் ஒப்படைத்தார் ஸ்டாலின்.

    3ஆவது அலை

    3ஆவது அலை

    அவர் நம்பிக்கையை காப்பாற்ற ஓடி கொண்டே இருந்தார். இன்று தமிழகத்தில் கொரோனா குறைந்து உள்ளது. அடுத்து 3ஆவது அலையை எதிர்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் சொல்கிறார்.

    வள்ளிமலைப் பகுதி

    வள்ளிமலைப் பகுதி

    இந்த நிலையில் அவர் இன்று காலை திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கொன்னமடையில் உள்ள வள்ளி மலைப்பகுதிக்கு சென்று ஓட்டப் பயிற்சியை மேற்கொண்டுள்ளதாக தனது ட்விட்டரில் வீடியோ பதிவிட்டுள்ளார். ஒத்தையடி பாதையில், சுற்றி செடிகள் முளைத்த இடத்தில் கொஞ்சமும் தனது ஓட்டத்தின் வேகத்தை குறைக்காமல் ஒதுங்கி ஒதுங்கி ஓடுகிறார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+