அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், நடிகை விந்தியா அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர்கள்.. அதிரடி அறிவிப்பு
சென்னை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், நடிகை விந்தியா ஆகியோர், அதிமுகவின் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிர்வாக வசதிக்காக அதிமுகவில் அமைப்பு ரீதியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்களையும் நியமித்துள்ளது அதிமுக.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு கூட இல்லாத நிலையில்,கட்சியை பலப்படுத்தும் வேலைகளில் அதிமுக தீவிரமாக களமிறங்கியுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள்
முன்னாள் அமைச்சர்கள் கருப்பசாமிபாண்டியன், இசக்கி சுப்பையா, சிவசாமி, புத்திச் சந்திரன், ரத்தினவேல், மருதராஜ், ராஜேந்திரன், திருத்தணி கோ.அரி, வாலாஜாபாத் பா.கணேசன், ஆசைமணி, சீனிவாசன் ஆகியோர் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய் மருத்துவர் அணி இணைச் செயலாளராகவும், முன்னாள் சட்டசபை உறுப்பினர் பாபு முருகவேல் சட்டப் பிரிவு இணைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாஃபா பாண்டியராஜன்
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், பாப்புலர் முத்தையா, நடிகை விந்தியா ஆகியோர் கொள்கை பரப்பு கொள்கை பரப்பு துணை செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நடிகை விந்தியாவுக்கான பதவி உயர்வு என்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, செயலாளராக வேடசந்தூர் தொகுதி எம்எல்ஏ, பரமசிவம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இணைந்து செயல்பட திட்டம்
பிற அமைச்சர்கள் பலருக்கும் மாவட்ட கழகச் செயலாளர் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில், மாஃபா பாண்டியராஜன், ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராக இருந்தவர். எனவே, ஓபிஎஸ்-எடப்பாடி அணிகள் இணைந்த பிறகு, செல்வாக்குமிக்க துறையில் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. ஆனால் அதை நிவர்த்தி செய்யும் விதமாக மாஃபா பாண்டியராஜனுக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

சசிகலா ரிலீஸ்
எனவே, வரும் சட்டசபை தேர்தலில், எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவில் முன்பு தனியாக செயல்பட்ட அணிகளை இணைத்து, அரவணைத்துச் செல்ல விரும்புவது தெளிவாக தெரிகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி, சசிகலா, சிறையிலிருந்து விடுதலையாக இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுகவை வலுப்படுத்தும் முயற்சிகளில் கட்சி தலைமை இறங்கியுள்ளது. அதன் ஒரு அங்கமாக இன்றைய அறிவிப்பு பார்க்கப்படுகிறது.
-
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
இடைத்தேர்தலில் அதிமுகவை காப்பாற்ற வேறு வழியில்லை.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி












Click it and Unblock the Notifications