அண்ணாமலை பேரை கேட்டதும்.. பேச்சே வரலை.. குலுங்கி குலுங்கி சிரித்த திமுக அமைச்சர்.. பரபர சம்பவம்!
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி கேள்வி கேட்டதும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குலுங்கு குலுங்கி சிரித்த சம்பவம் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் பெட்ரோல் டீசல் விலை மீதான வரியை மாநில அரசு குறைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இன்னும் 20 நாட்களில் தமிழ்நாடு முழுக்க மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடக்கும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அதோடு தமிழ்நாட்டில் பாஜகதான் நம்பர் 1 கட்சியாக இருக்கும், லோக்சபா தேர்தல் 2024ல் பாஜக 25 இடங்களை வெல்லும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை
இந்த நிலையில் பாஜக தலைவரின் இந்த பேச்சு குறித்து அமைச்சர் மனோ தங்கராஜிடம் கேள்வி கேட்கப்பட்டது. தமிழ்நாட்டில் திமுகவா? பாஜகவா என்று இரண்டு ஆண்டுகளில் தெரியும் என்று அண்ணாமலை சொல்லி இருக்கிறாரே. அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு.. ஹாஹா என்று சிரித்த அமைச்சர் மனோ தங்கராஜ்.. சிரிப்பை அடக்க முடியாமல்.. குலுங்கி குலுங்கி சிரித்தார்.

சிரித்தார்
அண்ணாமலை பற்றி என்ன சொல்வது.. சிரிக்கத்தான் முடியும். (சிரிக்கிறார்) அவருக்கு பதில் சொல்வதா? அவருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஆகாயத்தில் சிலம்பம் அடிப்பது என்று சொல்வார்கள். அப்படித்தான் அவர் அடிக்கிறார். அப்படி அடிக்க கூடாது. யதார்த்தம் தெரிய வேண்டும். அரசியல் யதார்த்தம் தெரிய வேண்டும்.

மனோ தங்கராஜ்
அவ்வளவு எளிதாக அவர்கள் எல்லாம் திமுகவிற்கு இணையாக வர முடியுமா? நீங்களே சொல்லுங்கள். அதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை. இது பெரியார் மண், என்றார். தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் 20 நாட்களில் போராடுவேன் என்று அண்ணாமலை கூறி இருக்கிறாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்.. தம்பி மக்கள் பார்த்துக்கொள்ளுவாங்க. மக்களுக்கு எல்லாம் தெரியும்.

பெட்ரோல் விலை
யார் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது என்று மக்களுக்கு தெரியும். கச்சா எண்ணெய் விலை என்ன, மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தியதா, வடமாநிலங்களில் ஏன் பெட்ரோல் டீசல் விலை உயர்வாக இருக்கிறது. இதை வைத்து அரசியல் செய்ய முடியாது என்று எல்லாம் மக்களுக்கு தெரியும், என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் மட்டும் பாதுகாப்பாக கடப்பது எப்படி? வெளியான சீக்ரெட் -
டீசலுக்கு கூடுதலாக ₹13.5 வரி! பெட்ரோலுக்கும் புதிய வரி.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! ஏன் முக்கியம் -
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications