தமிழ் கடவுள் முருகன்! தமிழர் வழிப்பாட்டு உரிமைகள் பறிப்பு! மனோ தங்கராஜ் வேதனை!
சென்னை: பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோருக்கு அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ள நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது மனதில் தோன்றிய கருத்தை பதிவாக வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு'
''பாரம்பரிய மரபுகள் பற்றி பெருமையாக பேசும் தமிழ் சமூகம் காலம் காலமாய் பின்பற்றி வரும் மரபுகளை சிதைக்கும் முயற்சியை வேடிக்கை பார்க்குமா? வரலாறு நெடுக பலமுறை 'தமிழர் வழிப்பாட்டு உரிமைகள் பறிப்பு' என்பது நடந்தேறியுள்ளது. அதன் நீட்சியே இந்த நடவடிக்கை. ஒரு காலத்தில் பண்டாரம் சமூகத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த பழனி தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகன் கோவிலில் அவர்களின் அர்ச்சகம் செய்யும் உரிமைகளே பறிக்கப்பட்டன. ''

''தமிழில் அர்ச்சனைகள் செய்வதை மாற்றி சமஸ்கிருத அர்ச்சனையே விதியானது. சைவம், வைணவம், கௌமாரம், காணப்பதியம், சௌரம், சாக்தம் மற்றும் நாட்டார் வழக்கு தெய்வங்கள் வழிபாடு என்று பன்முகத் தன்மை கொண்ட தமிழர் வழிப்பாட்டு மரபுகளை ஒற்றை அடையாளத்தில் அடைத்து, இந்த சமஸ்கிருத மேலாதிக்கத்துக்கு அடிப்பணியச் செய்தனர். கோவில் கருவறைக்குள் தமிழர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இன்று கொடிமரம் என்ற இந்த தடுப்புக்கான அளவுகோலும் அந்த வழிப்பாட்டு உரிமை மறுப்பின் நீட்சியே. இது தமிழரின் வழிப்பாட்டு ஜனநாயகத்துக்கு எதிரானது. தமிழ்நாட்டில் பழனி முருகன் கோவில், வேளாங்கண்ணி மாதா ஆலயம், நாகூர் தர்கா என்பதெல்லாம் அனைத்து சமயத்தினருக்கும் பொதுவான தளங்களாகவே இருந்திருக்கின்றன. இன்றளவும் தமிழ் நாட்டில் உள்ள பல கிராமங்களில் மக்கள் ஒற்றுமையுடன் இவ் வழிபாட்டு தளங்களுக்கு சென்று வருகின்றனர்.
இன்றும் இந்து அல்லாத தமிழக இளைஞர்கள் டிஎம் சௌந்தரராஜன் அவர்களின் முருகன் வழிப்பாட்டு பாடல்கள் விரும்பி கேட்பதும், பாட்டுப் போட்டிகளிலும் கலை நிகழ்ச்சிகளிலும் பாடி பரிசு பெறுவதும் அவர்களின் குடும்பத்தாலே கொண்டாடுப் பட்டு வருகின்றன. இது அனைத்து சமய தமிழர்களின் மத நல்லிணக்கத்தின் அடையாளம் ஆகும். ஆனால் இந்த 'கொடிமரம் தடுப்பு அளவுகோல்' நடவடிக்கை தமிழ் நாட்டின் உன்னதமான மரபை இல்லாமல் செய்து, மத சர்வாதிகார போக்கை இங்கு நுழைக்கிறது. ஆன்மிக தளங்கள் எல்லோரையும் ஆதரிக்கின்றன ஆனால் மதத் தளங்கள் எல்லோரையும் ஏற்றுக் கொள்வதில்லை.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications