சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'மதுரை எய்ம்ஸ் பணிகள் 95% நிறைவு'.. இதோ நானும் பார்க்க கிளம்பிட்டேன்.. நட்டாவை விடாத மனோ தங்கராஜ்!

Google Oneindia Tamil News

சென்னை: மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 95% நிறைவடைந்து விட்டதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பேசிய நிலையில், நானும் மதுரை எய்ம்ஸை பார்க்க கிளம்பிட்டேன் என ஒரு பதிவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

நேற்றைய தினம் சு.வெங்கடேசன் எம்.பியும், மாணிக்கம் தாகூர் எம்.பி.யும், நடிகர் வடிவேலுவின் கிணற்றை காணோம் நகைச்சுவை காட்சி பாணியில் மதுரையில் 95% கட்டப்பட்டதாக கூறப்பட்ட எய்ம்ஸை காணோம் என அதகளம் செய்தனர்.

காங்கிரஸ், திமுக, என பல கட்சிகளை சேர்ந்தவர்களும் ஜே.பி.நட்டா பேசியதை வைத்து ட்ரோல் செய்து வரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்க பாஜக தயாராகி வருகிறது.

என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா? 'கனிமவள கொள்ளை’ - பொன்னாருக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் சவால்! என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா? 'கனிமவள கொள்ளை’ - பொன்னாருக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் சவால்!

 ஜே.பி.நட்டா வருகை

ஜே.பி.நட்டா வருகை

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்த பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா 2 நாள் பயணமாக காரைக்குடி வந்திருந்தார். அப்போது பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 95% நிறைவடைந்துவிட்டதாக தெரிவித்தார். இதனை கெட்டியாக பிடித்துக் கொண்ட திமுகவும், காங்கிரசும் நேற்று முதல் நட்டாவையும், பாஜகவையும் சமூக வலைதளங்களில் கேலியும் கிண்டலும் செய்து வருகிறது.

வடிவேலு பாணி

வடிவேலு பாணி


மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனும், விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூரும் நேற்று எய்ம்ஸ் அமையவுள்ள மதுரை தோப்பூர் பகுதிக்கு சென்று 95% பணிகள் நிறைவடைந்து விட்டதாக கூறப்படும் எய்ம்ஸ் எங்கே என கேள்வி எழுப்பி பதாகைகள் ஏந்தி நின்றனர். அது மட்டுமல்லாமல் நடிகர் வடிவேலுவின் கிணற்றை காணோம் நகைச்சுவை காட்சி பாணியில் மதுரையில் 95% கட்டப்பட்டதாக கூறப்படும் எய்ம்ஸை காணோம் என பேட்டிகள் கொடுத்தனர்.

 நானும் கிளம்பிட்டேன்

நானும் கிளம்பிட்டேன்

இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனிடையே தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், 95% வேலை முடிந்த எய்ம்ஸ் எங்கே? என்ற கேள்வியுடன் கூடிய பதாகையை வைத்துள்ளார். அது மட்டுமில்லாமல் மதுரை எய்ம்ஸை பார்க்க நானும் கிளம்பிட்டேன் என சைக்கிளில் செல்வது போன்ற ஒரு படத்தையும் பதிவிட்டுள்ளார். இதற்கும் சமூக வலைதளங்களில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது.

பாஜக பதிலடி

பாஜக பதிலடி

இப்படியாக கடந்த 2 நாட்களாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தால் பாஜக ட்ரோலில் சிக்கித் தவித்து வருகிறது. இதனிடையே நட்டாவை வழியனுப்பி வைத்த கையோடு இந்த விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளது பாஜக மாநிலத் தலைமை.

English summary
IT Minister Mano Thangaraj twitter post about Madurai AIIMS
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X