Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கமலாலயம் குற்றவாளிகளின் சரணாலயம்.. ஜெயிலில் இருக்க வேண்டியவர்கள் அங்கு உள்ளனர்.. மனோ தங்கராஜ் தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: "கமலாலயம் குற்றவாளிகளின் சரணாலயம்! சிறைச்சாலைகளில் இருக்க வேண்டியவர்கள் கமலாலயத்தில் இருக்கிறார்கள்!" என அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. நேற்று சேலத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

Minister Mano Thangaraj says that Kamalalayam is a sanctuary for criminals

ஸ்டாலின் பேசுகையில், "என் கையில் ஒரு பட்டியலே இருக்கிறது. நான் ஆதாரத்துடன்தான் பேசுவேன். வாய்க்கு வந்தபடி எல்லாம் உளறிவிட்டு போகமாட்டேன். ஏனென்றால் நான் தலைவர் கலைஞரின் மகன். இதில் இருக்கும் பெயர் பட்டியல் ஏதோ தேசத் தலைவர்களோ.. சமூகச் சேவகர்களோ இல்லை.. எல்லோரும் சட்டம் ஒழுங்கைக் கெடுக்கும் ரவுடிகள்! சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள்! நான் சொல்வதில் தவறு என கூறினால், தைரியம் இருந்தால் தெம்பு இருந்தால், திராணி இருந்தால் என் மேல வழக்கு போட்டு பாருங்கள், நான் நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருக்கிறேன்.

ஆனால் இந்தப் பட்டியலில் இருப்பவர்கள் எல்லாம், இப்போது எங்கு இருக்கிறார்கள் தெரியுமா? அத்தனை பேரும் பா.ஜ.கவில்தான் இருக்கிறார்கள்! வழக்கமாக இந்த ரௌடிகள் பட்டியல் காவல் நிலையத்தில்தான் ஒட்டப்பட்டிருக்கும்.

32 பக்கங்கள் கொண்ட இந்தப் பட்டியலில், 1977 வழக்குகள் இருக்கும் 261 ரவுடிகள் இருக்கிறார்கள். இவர்களின் பெயர் என்ன? பா.ஜ.கவில் என்ன பொறுப்பில் இருக்கிறார்கள்? இவர்கள் மேல் என்ன என்ன பிரிவுகளில் வழக்குகள் இருக்கிறது? என்று இந்தப் பட்டியலில் தெளிவாக இருக்கிறது. எல்லா ரவுடிகளையும் உங்கள் கட்சியில் வைத்துக் கொண்டு சட்டம் ஒழுங்கைப் பற்றி நீங்கள் பேசலாமா?" என கடுமையாகப் பேசினார் ஸ்டாலின்.

இந்நிலையில், திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பேசியதைப் பகிர்ந்து பாஜகவை விமர்சித்துள்ளார் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ். இது தொடர்பாக மனோ தங்கராஜ் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கமலாலயம் குற்றவாளிகளின் சரணாலயம்! சிறைச்சாலைகளில் இருக்க வேண்டியவர்கள் கமலாலயத்தில் இருக்கிறார்கள்!

கலவரத்தை உருவாக்குபவர்கள் கமலாலயத்தில்...!
பாலியல் வன்புணர்வாளர்கள் கமலாலயத்தில்...!
மதவெறியை தூண்டுகிறவர்கள் கமலாலயத்தில்...!
குண்டு வெடிப்பு குற்றவாளிகள் கமலாலயத்தில்...!
குண்டு தயாரிப்பாளர்களும் கமலாலயத்தில்...!
ஊழல்வாதிகள் கமலாலயத்தில்...!
போலி செய்திகளை பரப்புபவர்கள் கமலாலயத்தில்...!
வெறுப்பு பிரச்சாரம் செய்பவர்கள் கமலாலயத்தில்!
மொத்தத்தில் பாஜகவின் கமலாலயம் குற்றவாளிகளின் சரணாலயம்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+