கைதட்டலுக்காக பேசுறவருக்கு இது எப்படி தெரியும்? அண்ணாமலையை அட்டாக் செய்த அமைச்சர் மனோ தங்கராஜ்!
சென்னை : கைதட்டலுக்காக மட்டும் பேசுபவர்களுக்குத் இது தெரிய வாய்ப்பில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கருத்தை விமர்சித்துள்ளார்.
கர்நாடக துணை முதல்வரும் நீர்வளத்துறை அமைச்சருமான டிகே சிவக்குமார், நீர்வளத்துறை அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிகே சிவக்குமார், மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாகத் தெரிவித்தார்.

மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகா காங்கிரஸ் அரசு உறுதியாக இருப்பது தமிழ்நாட்டினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிகே சிவக்குமாரின் பேச்சுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. திமுக அமைச்சர் துரைமுருகன், கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமாருக்கு கண்டனம் தெரிவித்தார்.
கர்நாடகா அரசு மேகதாது அணையைக் கட்டுவதில் பிடிவாதமாக இருந்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக, கர்நாடகா அரசுக்கு எதிராக என்ன செய்யப்போகிறது என அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்த விவகாரம் குறித்துப் பேசுகையில், "கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை கர்நாடகாவில் வைத்தே நான் எதிர்த்தேன். அம்மாநில துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் மேகதாது அணை கட்டப்படும் என உறுதியாக கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக காங்கிரசார் வாய் திறக்கவில்லை. தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக கர்நாடகா, கேரளா செயல்பட்டாலும் அது குறித்து முதலமைச்சர் எதிர்க்கவில்லை.
தமிழக முதல்வர், தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்து வருகிறார். மேகதாது அணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி இல்லை என்றால் அதனை நாங்கள் தடுத்து நிறுத்துவோம். அந்த ஆற்றல் எங்களுக்கு உண்டு." என அண்ணாமலை தெரிவித்தார்.
இந்நிலையில், அண்ணாமலைக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார். "இரு மாநில உரிமைகளுக்கு இடையே எழும் பிரச்சனைகளை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று முடிவு எடுப்பதுதான் நடைமுறை. இது கைதட்டலுக்காக மட்டும் பேசுபவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை" என அவர் விமர்சித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications