சவுதி அரேபியாவில் கேன்சல் ஆன அமைச்சர் மஸ்தான் புரோகிராம்! 30,000 ரியால் வீண்! பின்னணி என்ன?
சென்னை: சவுதி அரேபியாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொள்ளவிருந்த 'தமிழர்கள் சங்கமம்' நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டதால் 30,000 ரியால் வரை வீணாகியுள்ளது. இது இந்திய மதிப்பிற்கு சுமார் ஆறரை லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
சவுதி அரேபியாவில் உள்ள மக்கா, மதினாவுக்கு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் புனித உம்ரா பயணம் சென்றிருந்தார். அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக ரியாத்தில் தமிழர்கள் சங்கமம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க இசைவு தெரிவித்திருந்தார் அமைச்சர் மஸ்தான்.

அதற்கேற்ப தமிழக கலாச்சார மைய நிர்வாகிகள் சார்பில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அமைச்சரை விமான நிலையத்திலிருந்து அழைத்து வரவும், மீண்டும் அழைத்துச் செல்லவும் சொகுசு கார், தங்குவதற்கு 5 நட்சத்திர விடுதிகள் எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டன. அமைச்சர் தரப்பும் தமிழர்கள் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆவலுடன் இருந்தது.
இந்தச் சூழலில் லண்டனை சேர்ந்த திமுக பிரமுகர் போட்ட சில கன்டிஷன்கள் 'தமிழர்கள் சங்கமம்' நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த தமிழக கலாச்சார மைய நிர்வாகிகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் கூடி பேசி, நாம் செலவு செய்தது வீணாகப் போனாலும் பரவாயில்லை, லண்டன் பிரமுகர் போடும் கண்டிஷன்களை எல்லாம் ஏற்க முடியாது என தீர்க்கமாக முடிவெடுத்துள்ளனர்.
அதனடிப்படையில் விழாவுக்காக 30,000 ரியால் செய்யப்பட்ட போதும் தமிழர்கள் சங்கமம் நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அறிவித்து அமைச்சர் மஸ்தானுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர். இதனிடையே புனித பயணத்தில் இருந்த போது தான் மகன் மீதும் மருமகன் மீதும் கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்ததால் அந்த அப்செட்டில் இருந்த மஸ்தானும் நேராக சவுதியிலிருந்து சென்னை திரும்பிவிட்டார்.
இதனிடையே இந்த விவகாரத்தை சவுதி அரேபியாவில் உள்ள தமிழக கலாச்சார மைய நிர்வாகிகள் முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கும் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications