என்ன சார் வேலை செய்றீங்க! பத்திரப்பதிவு துறை அதிகாரியை லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய அமைச்சர் மூர்த்தி!
சென்னை: சென்னை முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதிரடி ஆய்வு நடத்திய அமைச்சர் மூர்த்தி கேள்விக்கணைகளால் அதிகாரிகளை திகைக்க வைத்துள்ளார்.
'டோக்கன் விவரம் கூட தெரியாம என்ன சார் வேலை செய்றீங்க' என ராயப்பேட்டை பத்திரப்பதிவுத் துறை அதிகாரியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டார் அமைச்சர் மூர்த்தி.
மேலும், ஆய்வுக்கு சென்ற இடங்களிலெல்லாம் பொதுமக்களை அழைத்துப் பேசிய அமைச்சர் மூர்த்தி, இந்த அலுவலகத்தில் உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்கிறார்களா, வேலை உடனே முடியுதா இல்லை காத்திருக்க வைக்கிறார்களா என கேட்டறிந்து கொண்டார்.

அமைச்சர் மூர்த்தி
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி இல்லத் திருமண விழா பெரும் சர்ச்சையில் சிக்கி விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், தனது அதிரடி ஆய்வுகள் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்திருக்கிறார் அமைச்சர் மூர்த்தி. சென்னை முழுவதும் நேற்று பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்திய அவர் அதிகாரிகளை கேள்விக்கணைகளால் வளைத்து திகைக்க வைத்திருக்கிறார்.

அமைச்சர் பாய்ச்சல்
சக அதிகாரிகள், ஊடகத்தினர் முன்னிலையிலேயே 'டோக்கன் விவரம் கூட தெரியாம என்ன சார் வேலை செய்றீங்க' என ராயப்பேட்டை பத்திரப்பதிவுத் துறை அதிகாரியை எல்லோர் முன்னிலையிலும் லெப்ட் அண்ட் ரைட் வாங்கினார் அமைச்சர் மூர்த்தி. மேலும், தன்னிடம் சிரித்து பேசிய பொதுமக்களிடம் கூட என்ன டென்ஷனோ தெரியவில்லை, முகத்தை கடுகடுவென வைத்திருந்தார் அமைச்சர் மூர்த்தி.

லஞ்சம் கேட்கிறார்களா?
இதனிடையே பத்திரவுப்பதிவுத் துறை அலுவலகங்களில் அடிக்கடி சர்வர் கோளாறு ஏற்படுவதால் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுவதாக ஒரு சிலரும், வேலை உடனே முடிந்துவிடுகிறது என ஒரு சிலரும் பொதுமக்கள் பல வித கருத்துக்களை அமைச்சரிடம் பகிர்ந்துகொண்டனர். இதனிடையே இந்த அலுவலகத்தில் உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்கிறார்களா எனவும் பொதுமக்களிடம் கேட்டறிந்து கொண்டார் மூர்த்தி.

அதிகாரிகளுக்கு அறிவுரை
ஆய்வுகளை முடித்துவிட்டு புறப்படும் போது பத்திரப்பதிவு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிய அமைச்சர் மூர்த்தி, வில்லங்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளதா என ஒன்றுக்கு இரண்டு முறை படித்து பார்த்து பதிவு செய்து கொடுக்குமாறும் கவனமில்லாமல் ஏனோ தானோ என்று வேலை செய்தால் இப்போது இருக்கும் சட்டத்தின் மூலம் தண்டனை பெறக்கூடிய வாய்ப்பிருப்பதாகவும் எச்சரித்து சென்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications