அண்டை மாநில வணிகர்கள்.. தமிழக விவசாயிகளின் காய்கறிகளை வாங்க கொள்முதல் மையங்கள்.. அமைச்சர் அறிவிப்பு
சென்னை: வேளாண் துறை பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், அண்டை மாநில வணிகர்கள் காய்கறி கொள்முதல் செய்ய 3 மாவட்டங்களில் கொள்முதல் மையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் நேற்று தமிழக அரசின் 2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து இன்றைய தினம் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
கடந்த ஆண்டு வேளாண் பட்ஜெட் தவழும் குழந்தையாக இருந்தது என்று குறிப்பிட்ட அவர், இந்த அந்த ஆண்டு வேளாண் பட்ஜெட் நடந்து செல்லும் குழந்தையாக இருந்தது என்றும் அடுத்த ஆண்டுகளில் வேளாண் பட்ஜெட் ஓடும் குழந்தையாகும் என்றும் கூறி அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதில் வேளாண் துறை குறித்துப் பல முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தேனி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மொத்த காய்கறி விற்பனை மையங்கள் அமைக்கப்படும் என்று எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் அண்டை மாநில வணிகர்கள் இங்கு நேரடியாகக் கொள்முதல் செய்ய வசதி ஏற்படுத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.
Recommended Video
அதேபோல தீவன பற்றாக்குறையை போக்க ஒருங்கிணைந்த பசும் தீவன உற்பத்தி திட்டம் தொடங்கப்படும் என அறிவித்த அமைச்சர், விளை நிலங்களில் ட்ரோன் மூலம் பூச்சி மருந்துகள் தெளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications