அரசு வேலை தேடுவோர் கவனத்திற்கு.. இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாறாதீர் -அமைச்சர் நாசர் அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பால்வளத்துறையில் டிரான்ஸ்ஃபர் பெற்றுத் தருகிறேன், வேலை வாங்கிக் கொடுக்கிறேன் என இடைத்தரகர்கள் பணம் கேட்டால் அதை நம்பி ஏமாற வேண்டாம் என, அரசு வேலை தேடுவோருக்கு அமைச்சர் நாசர் அட்வைஸ் செய்திருக்கிறார்.

அமைச்சர்களின் பெயரை பயன்படுத்தி அரசு வேலை தேடுவோரிடம் இடைத்தரகர்கள் பணம் பறிக்கும் நிகழ்வு அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அமைச்சர் நாசர் முன்னெச்சரிக்கையாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் ஆவினில் வேலை தாங்கித் தருகிறேன் என ஊருக்குள் உதார் விட்டுக்கொண்டு பணம் பறித்த பலருக்கு இனி உதை விழுகவும் வாய்ப்புண்டு.

இதனிடையே இது தொடர்பாக அமைச்சர் நாசர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

1 கோடி நுகர்வோர்

1 கோடி நுகர்வோர்

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசானது மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பொதுமக்கள் நலன் கருதி தமிழக அரசு அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைத்ததினால் ஆவின் பால் விற்பனை வெகு வேகமாக அதிகரித்துள்ளது. இதனால் 1 கோடி நுகர்வோர் மற்றும் 450 நிறுவனத்தினர் பயன் அடைந்துள்ளனர்.

பால் விலை

பால் விலை

ஆவின் பால் விலையை குறைத்ததால் ஏறக்குறைய 6 லட்சம் நுகர்வோர்கள் புதிதாக ஆவினில் இணைந்துள்ளார்கள். இதன் மூலம் ஆவினின் சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது. மேலும், ஆவின் பால் பொருட்கள் விற்பனையை அதிகரிக்கவும், செயலிழந்த பால் உற்பத்தி சங்கங்களை புதுப்பிக்கவும் விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

துரித நடவடிக்கை

துரித நடவடிக்கை

அதன் அடிப்படையில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், மாவட்ட ஒன்றியங்கள், மற்றும் பால்வளத்துறையில் ஆவின் செயல்பாடுகளை துரிதமாக விரைந்து நடவடிக்கை எடுக்கவும் நிர்வாக காரணங்களுக்காகவும் பணியிட மாறுதல்களுக்கு ஆணை வெளியிடப்படுகிறது.

 ஏமாற வேண்டாம்

ஏமாற வேண்டாம்

எனவே, ஆவின் மற்றும் பால்வளத்துறையில் பணியிட மாற்றம் மற்றும் புதிய பணி நியமனங்களுக்கு இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இவ்வாறு அமைச்சர் நாசர் தனது அறிவிப்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார். பலரும் ஆவினில் அரசு வேலை பெற வேண்டும் என்ற ஆர்வ மிகுதியில் முன் பின் அறிமுகமில்லாத இடைத்தரகர்களிடம் பணம் கொடுப்பதும் பிறகு ஏமாறுவதும் தொடர் கதையாகி வருவது கவனிக்கத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+