‘பசு நேசர்’ ஆன நாசர்.. 2 மணி நேரமா நகரவே இல்லையே.. சாலையில் துடித்த பசுமாட்டை மீட்ட அமைச்சர்! அட!
சென்னை : சாலை விபத்தில் சிக்கி வலியில் துடித்துக்கொண்டிருந்த பசுவை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், முதலுதவி செய்து, மீட்டு பாதுகாப்பாக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபிறகே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி, திருமுல்லைவாயில் பகுதியில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி எஸ்.எம்.நாசர் இன்று காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அமைச்சர் நாசரின் கார், ஒரு இடத்தில் திடீரென பிரேக் அடித்தது. அதற்குக் காரணம் ஒரு பசுமாடு.

திருமுல்லைவாயில் காவல் நிலையம் அருகே விபத்தில் சிக்கிய பசுமாடு ஒன்று சாலையில் காயங்களுடன் துடித்துக் கொண்டிருந்தது. காலில் அடிபட்டதால் எழுந்து சாலையோரம் செல்லக்கூட முடியாமல் பசு மாடு தவித்துக்கொண்டிருந்த நிலையில், அதை அங்கிருந்து நகர்த்த முடியாமல் பசுமாட்டை சுற்றி பலரும் நின்றிருந்தனர்.

இதனைக் கண்ட அமைச்சர் நாசர் காரை நிறுத்தச் சொல்லி இறங்கி, உடனடியாக பசு மாட்டிற்கு அருகே சென்று பார்த்து, அங்கிருந்தவர்களிடம் விசாரித்தார். பசுவுக்கு காயம் ஏற்பட்டிருந்த நிலையில், அதனை அங்கிருந்தோர் உதவியுடன் எழுப்ப முயன்றார். மேலும் காயம்பட்டு விடாமல் பாதுகாப்பாக சாலையோரத்திற்கு நகர்த்துமாறு கேட்டுக்கொண்டார்.

பசு மாட்டுக்கு அடி பலமாக பட்டிருப்பதை உணர்ந்து, உடனடியாக கால்நடை மருத்துவர்களை வரவழைத்து முதலுதவி செய்ய ஏற்பாடு செய்தார். ஆனாலும், பசு மிகவும் சுனங்கிக் காணப்பட்டதால், தனி வாகனம் ஒன்றை வரவழைத்து அதில் பசுமாட்டினை ஏற்றி வேப்பேரி கால்நடை மருத்துவனைக்கு அனுப்பி வைத்தார்.
சுமார் 2 மணி நேரமாக அப்பகுதியிலேயே இருந்து பசுவுக்கு முதலுதவிகள் செய்து, அதனை மீட்டு வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் வரை உடனிருந்தார் அமைச்சர் நாசர். பின்னர், கால்நடை மருத்துவர்களிடம், முறையான சிகிச்சை அளித்து, தனக்கு அப்டேட் செய்யும்படி உத்தரவிட்டார்.
இந்தச் செய்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் 'பசு நேசர்' அவதாரமெடுத்து, பசுவுக்காக 2 மணி நேரம் அங்கேயே காத்திருந்தது தொடர்பான வீடியோ, சமூக ஊடகங்களில் வெளியாகி பரவி வருகிறது.

முன்னதாக, அமைச்சர் நாசர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார். அண்மையில், திமுக பொதுக்கூட்ட ஏற்பாடுகளைப் பார்வையிட்டபோது, நீண்ட நேரமாக அமர நாற்காலி எடுத்து வராததால் கட்சித் தொண்டரை கல்லால் அடிக்க முயன்ற வீடியோ கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

அதேபோல, ஆவின் பால் விநியோகத்தில் தாமதம், ஆவின் பால் மற்றும் உப பொருட்கள் பற்றாக்குறை, ஆவின் பால் முகவர்கள் தொழிலாளர்கள் போராட்டம் என பல்வேறு நிர்வாக ரீதியிலான பிரச்சனைகளிலும் சிக்கி வந்தார். இந்நிலையில், இன்று பாசிட்டிவ்வான வகையில் அமைச்சர் நாசர் ட்ரெண்டாகியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications