கேவலமான முறையில் அண்ணாமலை விளம்பரம் தேடுகிறார்! அமைச்சர் ஆவடி நாசர் ஆவேசம்!
சென்னை: தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக மிகவும் கேவலமான முறையில் அண்ணாமலை விளம்பரம் தேடிக்கொள்கிறார் என அமைச்சர் நாசடி ஆவேசம் காட்டியுள்ளார்.
ஆவினில் இன்னும் தயாரிக்கப்படாத ஒரு பொருளை, ஏன் சுகாதாரத்துறை வாங்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியிருப்பது அவர் படித்த ஐ.பி.எஸ். படிப்புக்கு அழகல்ல என அமைச்சர் நாசர் சாடியிருக்கிறார்.
அமைச்சர்கள் எல்லாம் தனது குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பார்கள், அதை வைத்து விளம்பரம் தேடலாம் என்பதே அண்ணாமலையின் எண்ணம் என அவர் கூறியுள்ளார்.

ஊட்டச்சத்து பவுடர்
தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பவுடர் கொள்முதலில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அதற்கு அமைச்சர்கள் மா.சுப்ரமணியன் மற்றும் நாசர் ஆகியோர் கூட்டாக விளக்கம் அளித்துள்ளனர். அதில் அண்ணாமலை எப்படி ஐ.பி.எஸ். படித்தார் என தெரியவில்லை என்றும், ஆவினில் தயாரிக்கப்படாத ஒரு பொருளை சுகாதாரத்துறை ஏன் வாங்கவில்லை என அண்ணாமலை கேள்வி எழுப்பியிருப்பது நகைப்புக்குரியது என சாடினார்.

நிறைய வேறுபாடு
கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்து பவுடருக்கும் ஆவினில் இனி மேல் தயாரிக்க இருக்கக் கூடிய ஊட்டச்சத்து பவுடருக்கும் நிறைய வித்தியாசம் உள்ளதாகவும் ஆவின் தயாரிப்பு ஊட்டச்சத்து பவுடரை பொறுத்தவரை இப்போது தான் முதல் நிலை ஆய்வில் இருப்பதாகவும் இன்னும் தயாரிப்பு பணிகளே தொடங்கவில்லை எனவும் அமைச்சர் நாசர் தெரிவித்தார். அப்படியிருக்கும் போது கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பவுடரை ஆவினில் ஏன் வாங்கவில்லை என அண்ணாமலை வினவியுள்ளதாக கூறினார்.

கேவலமான அரசியல்
பாஜகவில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக மிகவும் கேவலமான முறையில் அண்ணாமலை விளம்பரம் தேடிக்கொள்கிறார் என்றும் தன்னை போன்ற அமைச்சர்கள் பதிலளிப்பதன் மூலம் அண்ணாமலை விளம்பரம் அடைகிறார் எனவும் அமைச்சர் நாசர் கூறினார். சுய விளம்பரத்திற்காக அண்ணாமலை கடைநிலை அரசியல் செய்து வருவதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆவேசம் காட்டியுள்ளார்.

அண்ணாமலை கேள்வி
அமைச்சர்கள் ஒரு பக்கம் இப்படி விளக்கமளித்து பதிலடி கொடுத்து வரும் சூழலில், அண்ணாமலை அடுத்தடுத்து குற்றச்சாட்டுக்களையும், கேள்விகளையும் தமிழக அரசை நோக்கி முன் வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே எதிர்க்கட்சி பாஜகவா, அதிமுகவா என்ற விவாதமும் ஒரு பக்கம் ஓடிக்கொண்டுள்ளது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications