ஒரு யூனிட் மின்சாரம் ரூ.41-க்கு கொள்முதலா? அமைச்சர் நிர்மல் குமார் மறுப்பு!
சென்னை: கடந்த ஒப்பந்தப்புள்ளியில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.37.50-க்கு தமிழக அரசு கொள்முதல் செய்தது. இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் முதல் மே 2027 வரை பீக் நேர மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, ஒரு யூனிட் ரூ.41.50 விலையில் 2,100 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய மின்வாரியம் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவலை அமைச்சர் நிர்மல் குமார் மறுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம் முழுக்க மின் தடை ஏற்பட்டது. வீதிகளில் இறங்கி மக்கள் போராடும் நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த மாதம் மின் தட்டுபாட்டை சமாளிக்க ஒரு யூனிட் மின்சாரத்தை அதிகபட்சமாக ரூ.37.50 வரை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்தது.

ஒரு யூனிட் ரூ. 37 எனும் விலையில் சுமார் 1,000 மெகாவாட் மின் கொள்முதல் செய்ய இருப்பதாக தமிழக அரசு அறிவித்ததற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். மின்வாரியம் பெரும் இழப்பை சந்திக்கும் என்றும் இதனால், ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் அறிவுறுத்தின.
கடந்த ஒப்பந்தப்புள்ளியில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.37. 50-க்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், வரும் டிசம்பர் மாதம் முதல் மே 2027 வரை பீக் நேர மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, ஒரு யூனிட் ரூ.41.50 விலையில் 2,100 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய மின்வாரியம் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அமைச்சர் நிர்மல் குமார் இதனை மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- ரூ.37 முதல் ரூ.41 வரையிலான விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப் போவது இல்லை. டெண்டர் இன்று திறக்கப்பட்ட நிலையில், பல நிறுவனங்கள் மிக அதிக விலையைக் குறிப்பிட்டுள்ளன. அடுத்த 3 மாதங்களுக்குத் தேவையான மின்சாரத்தைச் சமாளிக்க போதுமான மின்சாரம் நம்மிடம் இருக்கிறது.
அடுத்த கோடைக்காலத்திற்காக முன்கூட்டியே மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதால், இந்த விலைகள் நியாயமற்றவை ஆகும். அடுத்த 20 ஆண்டுகளுக்கான மின்சாரத் தேவையைக் கருத்தில் கொண்டு, நடுத்தர மற்றும் நீண்டகால டெண்டர்கள் வெளியிடப்பட உள்ளன.எனவே, இனி அதிக விலைக்கு கேஸ் மின்சாரம் கொள்முதல் செய்யப்படாது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள டெண்டரை ரத்து செய்யுமாறு ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளேன்"என்று தெரிவித்துள்ளார்.



Click it and Unblock the Notifications
