இன்னும் அடுத்தடுத்து இடைத்தேர்தல்கள் வரும்! இபிஎஸ்ஸை கட்சி ஆபிஸுக்குள்ளே விடாதீங்க! நிர்மல் குமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்னும் அடுத்தடுத்த இடைத்தேர்தல்கள் வரும் என அமைச்சர் நிர்மல்குமார் பகீர் தகவலை தெரிவித்துள்ளார். மேலும் எடப்பாடி பழனிசாமியை அதிமுக தலைமை கழகத்தினுள் விடாதீர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது: இன்னும் அடுத்தடுத்து பல இடைத்தேர்தல்கள் வரும். என்றைக்கு எடப்பாடி பழனிசாமி மாதிரியான தலைவர் தனது கொள்கைக்கும் ஜெயலலிதாவுக்கும், எம்ஜிஆருக்கும் செயல்பட்டாரோ அதனால்தான் அதிமுகவினர் தவெகவை நோக்கி வருகிறார்கள்.

by poll 2026 nirmal kumar 2026

நான் போன பிரச்சாரத்தில் ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன். எடப்பாடி பழனிசாமி, தலைமைக் கழகத்திற்கு செல்லும் போது எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் போது ஒரு வினாடி யோசித்து பாருங்கள், எப்படி அதிமுகவில் இருந்து கொண்டு திமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வேண்டும் என முடிவு செய்தீர்கள்.

எடப்பாடி பழனிசாமியை இனி தலைமைக் கழகத்திற்குள்ளேயே விடாதீர்கள். அந்த இடத்திற்கு செல்லும் அருகதை அவருக்கு கிடையாது. இதே நிலைமைக்கு திமுகவும் செல்லும். இனி பல இடைத்தேர்தல்கள் வரும்.

இந்த மதச்சார்பற்ற வெற்றிக் கூட்டணி இன்னும் பல ஆண்டுகளுக்கு சிறப்பாக செயல்படும். திமுக மோசமான நிலைக்குச் செல்லும். உதயநிதி திமுகவை முட்டுச்சந்தில் நிறுத்துவார். இவ்வாறு நிர்மல் குமார் பேசியிருந்தார்.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்கள் வரும் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 9ஆம் தேதி நடைபெறுகிறது. இரு தொகுதிகளிலும் அதிமுக, திமுக, தவெக, நாதக, மார்க்சிஸ்ட்- கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கொண்ட 5 முனை போட்டி நிலவி வருகிறது.

இரு தொகுதிகளிலும் 5 கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் என பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் விஜய் பிரச்சாரம் செய்தார்.

இதையடுத்து நேற்றைய தினம் மதச்சார்பற்ற வெற்றிக் கூட்டணியின் தலைவர்கள் விசிக திருமாவளவன், மதிமுக வைகோ, துரை வைகோ, காங்கிரஸ் மாணிக்கம் தாகூர், அமைச்சர் ஷாஜகான் உள்ளிட்டோர் மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர்.

அப்போது ஆதவ் அர்ஜுனா பேசுகையில் , ஒவ்வொரு கூட்டணியும் ஒரு கொள்கை அடிப்படையில் உருவாகும். அந்த கொள்கை எப்போதும் மதச்சார்பற்ற சமூகநீதி அடிப்படையில் வெற்றி பெற்றிருக்கிறது. நான் எப்போதும் திருமா அண்ணனிடம் சண்டை போட்டிருக்கேன். எல்லாத் தலைவர்களிடமும் சண்டை போட்டிருக்கிறேன். அண்ணாவாக இருக்கட்டும், கருணாநிதியாக இருக்கட்டும், அரசியல் அதிகாரத்தை நோக்கி மட்டுமே அவர்களது அரசியல் இருக்கும். சமூகநீதி அரசியலை பேசினாலும் அதிகாரத்திற்காக எல்லா முடிவுகளும் எடுப்பார்கள்.

எவனாலும் திருமாவையும் வைகோவையும் விலை கொடுத்து வாங்க முடியாது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வன்னியரசு அமைச்சர் ஆகக் கூடாதா? வன்னியரசுடைய அமைச்சரவை அவருக்கானது அல்ல, ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கான பிரதிநிதித்துவம். இது உதயநிதிக்கு தெரியுமா?

1999-ல் பாஜகவுடன் ஆட்சி அமைத்த பிறகு, 2004இல் காங்கிரஸ் கூட சென்றீர்களே? அப்போது வாஜ்பாயிடம் சொல்லிவிட்டா போனீர்கள்? நீங்கள் செய்தால் ராஜ தந்திரம், நாங்கள் செய்தால் ஃஷோபாவா? 15 எம்.பிக்களை வைத்துக் கொண்டு 8 அமைச்சர் வாங்குனீர்களே, உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கு மட்டும் அதிகாரம் வேண்டும்.

ஆனால் விசிகவுக்கு, ஐயூஎம்எல்-க்கும் அதிகாரத்திற்குள் வந்தால் ஃஷோபாவா? வரும் தேர்தலில் கூட்டணி இல்லாமல் 10 தொகுதிகள் ஜெயித்து காட்டுங்கள், திமுகவுக்கு சவால் விடுகிறேன் என ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+