Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்டை நாமம்.. விலைமாதர்.. "மகா கேவலமாக பேசிய பொன்முடியை பதவியிலிருந்து நீக்குங்க".. முழங்கிய அதிமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் பதவியில் இருந்தும் பொன்முடியை நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக பொன்முடி விஷயத்தில் பாஜக கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகிறது.. பொன்முடி பதவியை பறிப்பது தொடர்பாக ஆளுநரை சந்தித்து புகார் அளிக்கவும் தீவிரமாகி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், அதிமுகவும் பொன்முடிக்கு எதிரான போராட்டத்தை இன்று சென்னையில் நடத்தியிருக்கிறது. அதில் பொன்முடிக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பியிருக்கிறது.

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் திருவாரூர் கே.தங்கராசு நூற்றாண்டு விழா சென்னையில் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சில கருத்துகளை பேசியிருந்தார்..

Minister ponmudi Edappadi palanisamy admk

இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் பரவி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. யாரும் எதிர்பாராத வகையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழியிடம் இருந்து கண்டனக் குரல் ஒலித்தது. எந்தக் காரணத்துக்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கவை என்றார் கனிமொழி. அதேபோல, பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

பொன்முடி சர்ச்சை கருத்து

திமுக துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்கினார் முதலமைச்சர் ஸ்டாலின். வழக்கமாக பதவி பறிப்பு போன்ற அறிவிப்புகளை பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிடும் நிலையில், முதலமைச்சரே நேரடியாக அறிவித்திருந்தார்.. இதையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த அமைச்சர் பொன்முடி சர்ச்சை கருத்து தொடர்பாக விளக்கம் அளித்தார்.

பின்னர் பொன்முடி தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்.. "நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன்" என்றார்.

பொன்முடியை நீக்க வேண்டும்

ஆனாலும், அமைச்சர் பதவியில் இருந்தும் பொன்முடியை நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக, தமிழக ஆளுநரை மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து, பொன்முடியை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வலியுறுத்த உள்ளதாக தெரிகிறது.

இதற்கு நடுவில் அதிமுகவும் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளதுடன், கண்டன ஆர்ப்பாட்டத்தையும் அறிவித்தது.. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த அறிக்கையில், "பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில், வனத்துறை அமைச்சர் பொன்முடி, சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், சைவ மற்றும் வைணவ சமயங்களின் குறியீடுகளை தொடர்புபடுத்தி பெண்களை கொச்சைப்படுத்தி பேசி இருக்கிறார். பொன்முடியின் இத்தகைய பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

கண்டன ஆர்ப்பாட்டம்

பொன்முடியை கண்டித்து அதிமுக மகளிர் அணியின் சார்பில் 16ம் தேதி (புதன்) காலை 10 மணிக்கு சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதிமுக மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி தலைமையிலும், அமைப்பு செயலாளர் கோகுல இந்திரா முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ஆர்ப்பாட்டத்தில் மகளிர் தலைமை கழக செயலாளர்கள், மகளிர் எம்எல்ஏக்கள், மகளிர் முன்னாள் அமைச்சர்கள், மாநில அளவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வரும் மகளிர் நிர்வாகிகள் உள்ளிட்ட பெண்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தார்.

அதன்படியே இன்று அதிமுகவின் போராட்டம் நடந்தது..பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி அதிமுகவின் மகளிரணி சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகளிரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, சரோஜா உள்ளிட்ட மகளிரணியினர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கோஷம் எழுப்பியதுடன், அமைச்சர் பதவியில் இருந்தே பொன்முடியை நீக்க வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+