பட்டை நாமத்தால் வந்த பஞ்சாயத்து.. பறிபோன பொன்முடியின் பதவி! அது மட்டும் பத்தாது.. பறந்த கோரிக்கை!
சென்னை: தமிழக அமைச்சர் பொன்முடியின் பேச்சு அநாகரிகமானது எனவும், பெண்களையும், இந்து சமய நம்பிக்கையையும் கேவலமாக பேசியவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி," ஒரு பெண், நீங்கள் சைவமா, வைணவமா? என்று கேட்கிறார். அது அந்த பையனுக்கு புரியவில்லை.. விலைமாது வீட்டில் சைவமா, வைணவமா என்று கேட்கிறார்கள் என்று குழம்புகிறார்.
இவ்வாறு பேசிய பொன்முடி சைவமென்றால் பட்டை, வைணவம் என்றால் நாமம் என்று மேடையில் செய்து காட்டினார். அதுமட்டுமல்லாமல் சைவம், வைணவம் என்றால் என்ன என்பதற்கு மோசமான ஒப்புமையும் அளித்தார். அவர் பேச்சு சர்ச்சையான நிலையில், சொந்த கட்சியினரே கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதற்கிடையே அவரை திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், பெண்களையும், இந்து சமய நம்பிக்கையையும் கேவலமாக பேசியவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," பெரியார் திராவிடர் கழக கூட்டத்தில் மாநில அமைச்சர் பொன்முடி அருவருக்கத்தக்க வகையில் இந்துக்கள் புனிதமாக கருதும் திருநீறு, திருமண் ஆகியவற்றை குறிப்பிட்டு பேசிய விடீயோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.
பெண்கள் இருக்கும் இடத்தில் பொதுக் கூட்டத்தில் விபச்சாரியிடம் உடலுறவை வைத்து சைவமா வைணவமா என கேட்டதாக கூறிப்பிடுகிறார். இத்தகைய கருத்தை பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட அமைச்சர் பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்த காரணத்திற்காகவே அவரது அமைச்சர் பதவியை நீக்கம் செய்யவும் முடியும். இது போன்ற அநாகரீக பேச்சுக்களை பல சமயங்களில் திமுக பின்னணி கொண்டவர்கள் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்துக்கள் வன்முறையில் இறங்குவதில்லை என்ற தைரியத்தில் தான் தி.மு.க., தி.க. போன்ற கட்சிகள் கண்டபடி பேசுகிறார்கள்.
இதுவே வேற்று மதத்தினர் குறியீடுகளை குறித்து யாராவது ஒருவர் பேசியிருந்தால், சமூக ஊடகத்தில் பதிவு செய்து இருந்தால் காவல்துறை நள்ளிரவில் பாய்ந்து சென்று கைது செய்து சிறையில் அடைத்து இருக்கும். இல்லை நீதிபதிகளே சமூக ஊடகத்தில் பார்த்ததற்கு நடவடிக்கை எடுக்க தானாக முன்வந்து கருத்து வெளியிட்டு இருப்பார்கள். ஆக, இந்துக்களின் புனிதமான சின்னங்களை செக்ஸ் உடன் சம்பந்தபடுத்தி மாநில அமைச்சரே பேசும் அவலம் தமிழகத்தில் இருக்கிறது என்பது எத்தகைய வேதனையானது.
இந்துக்களிடம் போராடும் குணம் தீவிரமாக வேண்டும். இல்லையேல் சட்டமோ, நீதியோ, அரசு அதிகாரிகளோ ஒரு பொருட்டாகக்கூட மதிக்காத இழிநிலையை காண்கிறோம். அமைச்சர் பொன்முடி பேசியது இந்து விரோத கருத்து ஏற்புடையதா என்பதை திமுகவின் தலைவர் தமிழக முதல்வர் விளக்கம் தர வேண்டும். திமுக எம்பி ஆ. ராசா திமுகவினர் இந்து சமய சின்னங்களை அணியக்கூடாது என்று பேசினார். இதுபோன்ற பேச்சு திமுகவின் உள்நோக்கத்தை தமிழர்களுக்கு வெளிக்காட்டுகிறது.
திமுக தலைவர்களுக்கு இந்து சமய நம்பிக்கை இல்லாமல் இருப்பது அவர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால் திமுகவில் இருப்பவர்கள் சமய சின்னங்களை அணிய கூடாது என்பதும், இந்து சமய நம்பிக்கையை அமைச்சர் பொன்முடி கொச்சைப்படுத்தையும் இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. அமைச்சர் பொன்முடி பேசிய அருவருக்கத்தக்க கருத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டித்து அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்." என கூறியுள்ளார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications