எல்லாமே ஜோடிக்கப்பட்டது.. ஆடியோவிற்கு இடையே.. பிடிஆர் நடத்திய முக்கிய மீட்டிங்.. பேசியது என்ன?
சென்னை: ஆடியோ சர்ச்சைகளுக்கு இடையே நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தலைமை செயலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.
கடந்த தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முக்கியமான சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழ்நாடு உட்கட்டமைப்பு தொடர்பான அதிரடி அறிவிப்புகள் சிலவற்றை வெளியிட்டார். அதில் முக்கியமாக, சென்னை கோடம்பாக்கம்- பூவிருந்தவல்லி மெட்ரோ ரயில் திட்டம் 2025-ல் நிறைவு செய்யப்படும்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ10,000 கோடி நிதி ஒதுக்கீடு என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
ரூ100 கோடியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும். விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். இதனால் 22,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
ரூ621 கோடியில் சென்னை அண்ணாசாலையில் 4 வழி மேம்பாலம் அமைக்கப்படும். சென்னை தேனாம்பேட்டை- சைதாப்பேட்டை இடையே 4 வழி மேம்பாலம் கட்டப்படும். ரூ621 கோடியில் சென்னை அண்ணாசாலையில் 4 வழி மேம்பாலம் அமைக்கப்படும்.
ரூ1,000 கோடியில் வட சென்னை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும், தமிழ்நாட்டில் உள்ள 10 ஆயிரங்கள் குளங்கள், நீர் நிலைகள் தூய்மைப்படுத்தப்படும். அடையாறு , கூவம் பகுதிகளை மறுசீரமைக்க ரூ. 1,500 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் எழில்மிகு கோவை, மாமதுரை திட்டங்கள் மூலம் 2 நகரங்கள் மேம்படுத்தப்படும். ரூ172 கோடியில் கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் ₹9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மதுரையில் ₹8500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

பள்ளி கல்வித்துறைக்கு ரூ40,299 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பள்ளி கல்வித்துறையின் கீழ் அனைத்து துறை பள்ளிகளும் கொண்டு வரப்படும். அறநிலையத்துறை கீழ் செயல்படும் பள்ளிகள் கல்வித்துறைக்கு கீழ் கொண்டு வரப்படும்.
புதிய வகுப்பறைகள், ஆய்வகங்களுக்கு ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாடு திட்டத்தில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்., 2 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ரூ1,500 கோடியில் புதிய வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்த நிலையில்தான் நேற்று இந்த அறிவிப்புகள் தொடர்பாக முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மேற்கொண்டார்.
நேற்று தலைமைச் செயலகத்தில் இந்த மீட்டிங் நடத்தப்பட்டது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில், "முக்கிய பெரிய உள்கட்டமைப்பு திட்டங்கள்" (Major Infrastructure Projects) தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு , திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், துறைச் சார்ந்த அரசு செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக முக்கியமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டு அரசியலில் பிடிஆர் பேசுவதாக கூறப்படும் ஆடியோ புயலை கிளப்பி உள்ளது. கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ என்று ஒரு ஆடியோ வைரலாகி வருகிறது.
பல்வேறு விதமான விவாதங்களை இந்த ஆடியோ ஏற்படுத்தி உள்ளது. திமுகவினர் மீதே குற்றச்சாட்டு வைக்கும் விதமாக ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.
இந்த ஆடியோவில் உண்மைத்தன்மை அறியப்படவில்லை. இந்த நிலையில் நேற்று இன்னொரு ஆடியோவும் வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த இரண்டு ஆடியோக்களின் உண்மைத்தன்மை தெரியவில்லை. அமைச்சர் பிடிஆர் இந்த ஆடியோ ஜோடிக்கப்பட்டது, பொய்யானது.
இந்த சமீபத்திய ஆடியோக்கள் பற்றிய என்னுடைய ஒரே கடைசி அறிக்கை இதுதான். இனிமேல் இது போன்ற பொய்யான அவதூறுகளை நான் புறக்கணிப்பேன். இத்தகைய அவதூறுகள் என்னுடைய சகிப்புத்தன்மை மிஞ்சும் அளவிற்கு இருந்தால், நான் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். என்று குறிப்பிட்டு இருந்தார்.
-
அதிருப்தியில் அண்ணாமலை? தேர்தலில் வாய்ப்பு தராதது ஏன்! பாஜக தலைமை சொன்ன முக்கிய தகவல் -
ஜனநாயகன் படத்தை வெளியிட்ட விஷக்கிருமிகள்.. அடித்து சொன்ன அண்ணாமலை.. சிபிஐ வராங்களாமே -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
ஹெலிகாப்டரில் பறந்த அண்ணாமலை.. தரையிறங்கியதும் சுத்துப்போட்ட அதிகாரிகள்! என்ன நடந்தது? பரபரப்பு -
போய் டவுசரை போட்டு வேலையை பார்க்க சொல்லுங்க.. அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
கந்தசாமியா.. பழனிசாமியா.. கன்ஃபியூஷ் ஆன அண்ணாமலை.. ஷாக்கான அதிமுக வேட்பாளர் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்!











Click it and Unblock the Notifications