போராட்ட களத்தில் அமைச்சர்களுக்கு தூய்மை பணியாளர் கொடுத்த வரவேற்பு.. உடைந்து பேசிய புஸ்ஸி ஆனந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக ஆட்சியமைத்து 4 மாதங்கள் கடந்துவிட்டன. அரசியல் மாற்றம் ஏற்பட்டாலும், நிர்வாகத்தில் குளறுபடிகள் தொடர்ந்து வண்ணம் உள்ளது. சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது புஸ்ஸி ஆனந்த் போராட்டத்தின் போது சிரித்த முகத்துடன் வரவேற்ற உங்களை பார்க்கவே சங்கடமாக இருக்கிறது என்று உடைந்து பேசினார்.

சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மத்தியில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், "அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாடு முதலமைச்சர் உங்களை சந்தித்து உங்கள் குறைகள் என்ன என்று கேட்பதற்கு எங்களை அனுப்பி வைத்துள்ளார். போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வரும்போது கோபமாக இருப்பார்கள். முகம் சோகமாக இருக்கும். ஏதோ கடமைக்கு வருகிறார்கள். நாமும் கடமைக்கு பதில் சொல்வோம் என்று தான் இருப்பார்கள். நாங்கள் இங்கே வரும்போது சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

Sanitary workers

எளிய மக்களின் முதலமைச்சர்

உங்களுடைய முகத்தில் அவ்வளவு சந்தோஷத்தை பார்த்தோம். தமிழக முதலமைச்சர் உங்களுக்கு எல்லாமே செய்வார் என்கிற நம்பிக்கை உங்களின் முகத்தில் தெரிகிறது. உங்கள் நம்பிக்கை வீணாகாது. உங்கள் முகத்தில் எப்போதும் மகிழ்ச்சி இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வளவு காலம் எல்லாவற்றையும் அப்படியே கடந்துவந்துள்ளீர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்து 116 நாட்கள் தான் ஆகிறது. உங்களுக்கு சூட்சமும் தெரிந்துவிட்டது.

மற்ற ஆட்சியில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினால் கண்டுகொள்ள மாட்டார்கள். தவெக ஆட்சியில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினால் முதலமைச்சர் கவனித்து நடவடிக்கை எடுப்பார் என்று தெரிந்து வைத்துள்ளீர்கள். பல வருடங்களாய் போராட்டம் நடத்தி யாரும் எதுவும் கேட்கவில்லை. நாங்கள் அப்படியில்லை, முந்தையவர்கள் போல நம் முதலமைச்சரும் இல்லை. முதலமைச்சர் எங்களை அப்படி வழிநடத்தவில்லை. ஏழை, எளிய மக்களுடன் நிற்கும் மக்களின் முதலமைச்சர்.

சிரிப்பு அப்படியே நிற்கும்

உங்களின் கோரிக்கை நியாயமானது என்பதை அறிவோம். பழைய ஆட்சியில் கஜானாவை காலி செய்துவிட்டனர். கஜானா மட்டும் தான் இருக்கு. அதில் எதுவும் இல்லை. கஜானாவை முறையாக பராமரித்து, மக்கள் வரிப்பணத்தில் ஒரு பைசா கூட எடுக்காமல் உங்களுக்கு தேவையான கோரிக்கைகளை நிறைவேற்றுவோம். உங்களுக்கு எது உடனடியாக தேவையோ அதை முதலமைச்சர் நிறைவேற்றுவார் என்று நம்பிக்கை அளிக்கிறோம். தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்.

உங்களை பார்க்கும்போதே சங்கடமாக உள்ளது. எங்களை சிரித்த முகத்துடன் வரவேற்றீர்கள். கடைசி காலம் வரை அந்த சிரிப்பு இருக்கும். நீங்கள் சந்தோஷத்துடன் இருப்பதற்கு முதலமைச்சர் உறுதுணையாக இருப்பார். அனைவரும் கலந்து பேசி நல்ல முடிவை எடுப்போம். வாய்ப்பளித்தவர்களுக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்" என்றார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+