கருணாநிதிக்கு அமெரிக்காவில் சிகிச்சை கொடுத்திருந்தால்.. அழகிரிதான் திமுகவின் தலைவர்.. அமைச்சர்
சென்னை: கருணாநிதிக்கு அமெரிக்காவில் பேச்சு பயிற்சி கொடுத்திருந்தால் முக ஸ்டாலினுக்கு பதில் முக அழகிரியை திமுக தலைவராக்கியிருப்பார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், மு.க.ஸ்டாலின் ஜனாதிபதி ஆவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. மே 23-ஆம் தேதியுடன் ஆட்சி கவிழும் என திமுகவினரை ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார்.
ஈபிஎஸ் ஆட்சியை கவிழ்க்க எதிரிகளும் துரோகிகளும் சேர்ந்து கொண்டு சதி செய்கின்றனர். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் மறைமுகமாக 40 திமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

முக அழகிரி
கருணாநிதிக்கு அமெரிக்காவில் பேச்சு பயிற்சி கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு கொடுத்திருந்தால் ஸ்டாலினை நீக்கிவிட்டு திமுக தலைவராக முக அழகிரியை தலைவராக்கியிருப்பார்.

4ஆவது அணி
3ஆவது அணி உருவானால் என்ன, 4-ஆவது அணி உருவானால் என்ன. மோடிதான் பிரதமர்.குழப்பத்தில் உருவானது அமமுக கட்சி. அக்கட்சியினரே அதிமுக கரை வேட்டிகளை வாங்கி வருகின்றனர் என்றார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

கருணாநிதிக்கு
கருணாநிதிக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சொல்ல ஆரம்பித்தார். இதையடுத்து அமைச்சர்களும் கருணாநிதிக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை குறித்து பேச ஆரம்பித்துவிட்டனர்.

சந்தேகம்
தேர்தல் முடிந்தவுடன் கருணாநிதி மரணம் குறித்த விசாரணை நடத்தப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் மதுரைக்காக அழகிரியை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியாக அழகிரிக்கு ஆதரவாக அதிமுக அமைச்சர்கள் பேசுவது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications