தலைவா... இப்படி திரும்பி ஒரு போஸ்.. அப்படி திரும்பி ஒரு போஸ்.. நடுநடுவே "இது ஓகேவா"!
வேட்டி சட்டையுடன் ராஜேந்திர பாலாஜி நடமாடி வருகிறார்
Recommended Video
சென்னை: இப்படி திரும்பி ஒரு போஸ்.. அப்படி திரும்பி ஒரு போஸ்.. நடுநடுவே "இது ஓகேவா" என்று கேட்டு போஸ் கொடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால், அமெரிக்காவின் நயாகரா நீர்வீழ்ச்சியே தெறித்து கொண்டு ஓடுகிறது.
தமிழ்நாட்டு அமைச்சர்களில் பெரும்பாலானோர் ஃபாரீன் போயுள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் துறை ரீதியான காரணங்களுக்காகவும், அரசு முறை பயணமாகவும் வெளிநாட்டில் உள்ளனர்.
எடப்பாடியார், செங்கோட்டையன், விஜயபாஸ்கர்.. வரிசையில் ராஜேந்திர பாலாஜியும் சேர்ந்துள்ளார். கடந்த சில தினங்களாகவே முதல்வர் உட்பட அமைச்சர்களை கோட்-சூட், வேஸ்கோட் போன்ற உடைகளில் நாம் பூரித்து போய் பார்த்து வருகிறோம்.

மறத் தமிழன்
அதனால் அமெரிக்கா போயுள்ள ராஜேந்திர பாலாஜியும் கோட்-சூட் போடுவார் என்று ஆவலுடன் இருந்தோம். ஆனால் அதே பளிச் வேட்டி-சட்டையில் அங்கு மறத்தமிழனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். முதல்வரை சந்தித்த கையோடு, நயாகரா நீர்வீழ்ச்சி பக்கம் இதே வேட்டி சட்டையுடனே சென்றுவிட்டார்.

இது ஓகேவா?
அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகளுக்கு நடுவே நம்ம ஆள் மட்டும் வித்தியாசமாக காணப்படுகிறார். நயாகரா நீர்வீழ்ச்சி நாலாபுறமும் கொட்ட, அதனை ரசித்து பார்க்கும்படி வளைத்து வளைத்து போஸ் கொடுத்துள்ளார். நடுநடுவே வேட்டியை அட்ஜஸ்ட் செய்து கொண்டு, இது ஓகேவா என்று கேட்டு போஸ் தருகிறார்.

அமெரிக்கா
ஒரு பக்கம் அமெரிக்காவில் முதல்வர் கோட்-சூட் போட்ட வீடியோ வைரலானது என்றால், இன்னொரு பக்கம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த வழக்கமான வேட்டி-சட்டை வீடியோவும் வைரலாகிறது. எதனால் இவர் கோட்-சூட் போடவில்லை என தெரியவில்லை.

பூரிப்பு
எங்கு போனாலும் தமிழன் தமிழன்தான் என்பதை வெளிப்படுத்தவா அல்லது அவருக்கு கோட்-சூட் போட விருப்பமில்லையா என்பது தெரியவில்லை. ஆனால் அமெரிக்காவே போனாலும் ராஜேந்திர பாலாஜி தமிழனாகவே வலம் வந்து கொண்டிருப்பதை நம் மக்கள் பூரிப்புடனே கவனித்து வருகிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications