தெய்வபக்தி உள்ளவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி... திமுக மீது அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சாடல்
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெய்வபக்தி மிக்கவர் என்றும், கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற அயராது பாடுபடுகிறார் எனவும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழக அரசை பற்றி அவதூறு பரப்புவதும், குறை கூறுவதுமே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வேலையாக உள்ளது என அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உலக சுகாதார நிறுவனமே பாராட்டக் கூடிய வகையில் உள்ளதாக கூறியிருக்கிறார்.

அமைச்சர் விமர்சனம்
தினம்தோறும் ஆள்வைத்து அறிக்கை வெளியிட்டு அரசியலில் நானும் இருக்கிறேன் என்பதை காட்டிக்கொள்ள ஸ்டாலின் படாதபாடு படுவதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விமர்சித்துள்ளார். கொரோனா நோயை வைத்து மு.க.ஸ்டாலின் மலிவான அரசியல் செய்வதாகவும், தன் இருப்பை காட்டிக்கொள்வதற்காக அவர் இவ்வாறு நடந்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார். அறிக்கைகளால் ஸ்டாலின் மக்களை குழப்புவதை நிறுத்த வேண்டும் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

காழ்ப்புணர்ச்சி
கொரோனா காலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிடும் அனைத்து அறிக்கைகளும் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாக இருப்பதாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றி மு.க.ஸ்டாலின் அவதூறு பரப்புவது கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா தமிழகத்தில் உருவானது அல்ல என்றும் இது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும் எனவும் கூறியிருக்கிறார். அரசை குறை கூறுவதை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.

தவறில்லை
கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால் தான், கொரோனா எப்போது ஒழியும் என்ற கேள்விக்கு இறைவனுக்கு தான் தெரியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பேட்டியில் தெரிவித்ததாகவும், அவர் கூறியதில் எந்த தவறும் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும், முதலமைச்சர் தெய்வபக்தி மிக்கவர் என்றும்,கொரோனாவில் இருந்து மக்களை காப்பற்ற அயராது பாடுபடுகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.

திமுக எச்சரிக்கை
அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சட்டத்தின் முன் பதில் சொல்லவேண்டிய காலம் வெகு தொலைவில் என திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கடந்த வாரம் காட்டமான அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், இன்று பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. அதில் தான் திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications