விஜய்யை சரமாரியாக அட்டாக் செய்து பேசிய சீமான்.. அமைச்சர் ராஜ்மோகன் காட்டமான பதிலடி
சென்னை: நடிகருக்கும், தலைவருக்கும் வித்தியாசம் தெரியாத கூட்டம் என்று சீமான் விமர்சனம் செய்தது பற்றி அமைச்சர் ராஜ்மோகன் பதில் அளித்துள்ளார். அவரே (சீமான்) சினிமாத்துறையில் இருந்து வந்தவர்தான் என பதிலடி கொடுத்துள்ளார். மேலும், எம்.ஜி.ஆர் யார்? ஜெயலலிதா யார்?.. எனவும், திரையில் மட்டுமே நடிக்கக் கூடிய தலைவர் எங்கள் தலைவர் எனவும் பதில் அளித்தார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சென்னை பல்லாவரத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது தமிழக முதல்வர் விஜய் மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். தலைவனுக்கும் நடிகருக்கும் வித்தியாசம் தெரியாத தறுதலை கூட்டமே.. தமிழ் என்று உச்சரிக்காதவன்.. தமிழன் என்று உச்சரிக்காதவனிடம் நாட்டை கொடுத்துவிட்டு எங்களை நடுரோட்டில் விட்டுவிட்டியேடா பைத்தியக்காரா..

இடைத்தேர்தலுக்காக வெறியோடு இருக்கிறேன்
திரள்நிதி திரள்நிதின்னு இவ்வளவு நாளா சொன்னது யாருன்னு கேட்டா திருட்டு நிதிக்காரன்.. இப்போது சொல்கின்ற அயோக்கியப்பய யாரு பிளாக் டிக்கெட் காரன்.. ஆட்டம் மாறி மாறி தான் ஆடுவோம். இந்த ஆட்டம் உங்க கையில இருக்கு. உங்க காலில் இருக்கிற பந்து ஒரு நாள் எங்கள் கால்களுக்கு வரும். இடைத்தேர்தலுக்காக நான் காத்துக்கொண்டு இருக்கிறேன்.. வெறியோடு இருக்கிறேன்.. என்று பேசியிருந்தார்.
இன்று தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை செலுத்தினார். அப்போது நடிகருக்கும், தலைவருக்கும் வித்தியாசம் தெரியாத கூட்டம் என்று சீமான் விமர்சனம் செய்தது பற்றி அமைச்சர் ராஜ்மோகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராஜ்மோகன் கூறியதாவது:-
அவரே சினிமாவில் இருந்து வந்தவர்தான்
அவரே (சீமான்) சினிமாத்துறையில் இருந்து வந்தவர்தான். எம்.ஜி.ஆர் யார்? ஜெயலலிதா யார்?.. திரையில் மட்டுமே நடிக்கக் கூடிய தலைவர் எங்கள் தலைவர்" என்று பதில் அளித்தார். வேளாண் துறை அமைச்சர் பட்ஜெட்டை திருப்பதியில் வழிபட்டு வந்துள்ளார்.
அதற்கு கண்டனங்கள் எழுந்தது பற்றி செய்தியாளர்கள் கேட்ட போது, "இதற்கு முன்பு அண்ணா அறிவாலயத்தில் இல்லை. கருணாநிதியின் சமாதியில் வைத்தே வழிபட்டு வந்து இருக்கிறார்கள். தனிப்பட்ட ஒருவரின் இறை நம்பிக்கையை விமர்சனம் செய்ய முடியாது. இதற்கு முன்பு அப்படி நடந்துள்ளது" என்றார்.


Click it and Unblock the Notifications
