Protocol பார்க்காமல் மேயர் பிரியா தாராளமாக வரலாமே! அமைச்சர் ராஜ்மோகன்
சென்னை: Protocol பார்க்காமல் மேயர் பிரியா அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். அவரை யாரும் புறக்கணிக்கவில்லை. அழைப்பு விடுத்தால்தான் அவர் வர வேண்டும் என்றில்லை என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
மருது பாண்டியர்கள் நினைவு நாளை ஒட்டி சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள மருது பாண்டியர்கள் திருவுருவச்சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள மருது பாண்டியர்கள் திருவுருவச்சிலைக்கு தமிழக அரசு சார்பாக அமைச்சர் ராஜ்மோகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது: ஆங்கிலேயர்களின் சிம்ம சொப்பனம், வீரமிகு வீரர் மருது பாண்டியர்கள் நினைவு நாளில் தமிழக அரசு சார்பாக மரியாதை செலுத்தினோம்.
அவரது வாழ்க்கை வரலாறுகளை அனைவரும் தெரிவிந்து கொள்ள வேண்டும். பள்ளிகளில் சாதிய ரீதியான பிரச்சனைகள் அதிகரித்து வருவது குறித்தான கேள்விக்கு,
பள்ளியில் என்ன சம்பவங்கள் நடந்தாலும் அது மாணவர்களை பாதிக்கும்.
சாதி ரீதியாக மாணவர்கள் பாதிக்கப்படும்போது மனதளவில் பாதிக்கப்படுவார்கள். எந்த அரசியல் தலையிடும் இல்லாமல் ஒரு விசாரணை நடைபெற வேண்டும் என தெரிவித்தார்.
தவறு யார் செய்திருந்தாலும் நேர்மையாக விசாரணை செய்ய வேண்டும் எனவும் உடல் வலிமை பெற உடற்பயிற்சி வகுப்புகள் நடைபெறுவது போல மன வலிமை பெற ஆலோசனை வழங்கி வருகிறோம். இதில் நமக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது. அதை தடுக்கக் கூடிய கூட்டுப் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது எனவும் ஆசிரியர்களுக்கு எமோஷன் தொடர்பாக வகுப்புகள் எடுப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்
என கூறினார்.
தமிழகத்தில் குழந்தைகள் காணாமல் போவது அதிகரித்து வருகிறது என்ற கேள்விக்கு, காணாமல் போகும் குழந்தைகள் வேகமாக மீட்கப்பட்டு வருகிறார்கள். குழந்தைகளிடம் ஆசை வார்த்தை காட்டி அந்த குழந்தையின் தந்தை கூப்பிடுகிறார் என கூறி அழைத்து செல்கின்றனர்.
உலகம் முழுவதும் குழந்தைகள் கடத்தப்பட்டு வேறு வேறு இடங்களுக்கு உடனே மாற்றப்படுகிறார்கள். அந்த குழந்தைகளை தவறாக வழிநடத்துகிறார்கள் எனவும் இது போல் நடைபெறாமல் இருக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
குழந்தைகள் காணாமல் போனதும் பல நூறு சிசிடிவி களை ஆராய்ந்து வருகிறார்கள். மேலும் மோப்ப நாய்களை கொண்டும் தீவிரப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக நகரங்கள் போல கிராமங்களிலும் அதிக விழிப்புணர்வு தேவையாக உள்ளது. மிக நேர்மையாக விசாரணை நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரியில் தவெக நிர்வாகி மீது பாலியல் புகார் வந்துள்ளது என எதிர்கட்சி தலைவர் குற்றச்சாட்டு குறித்தான கேள்விக்கு, தவெகவில் இணையவழியில் வந்து இணைந்தவர்கள் எல்லாம் தவெக நிர்வாகிகள் கிடையாது.
மாநில அளவில் பொறுப்புகளில் உள்ளார்கள் அல்ல 99 சதவீதம் நபர்கள் இணையவழி மூலம் தவெகவில் இணைந்து உள்ளனர். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கட்சியில் இருந்து நீக்கி காவல்துறையிடம் நாங்கள், அவர்கள் மீது எந்த கருணையும் காட்டி விடதீர்கள் என கூறி புகார் கொடுக்கிறோம்.
எதிர்கட்சி தலைவர் சொல்வது எல்லாம் அரசியல் காரணத்திற்கான சொல்கிறார். மற்ற கட்சிகளை போல் தவெக அல்ல. தவறு செய்தவர்களை பாரபட்சம் இன்றி அவர்களது கடும் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.
தவெக அரசாங்கம் மேயரை புறக்கணித்து இருக்கிறது சென்னை மேயர் பிரியா பேசி உள்ளது குறித்தான கேள்விக்கு, மாண்புமிகு மேயரை நாங்கள் எங்கே புறக்கணிக்கிறோம்? மாநகராட்சி அலுவலகம் வருவதற்கு நாங்கள் ஏன் அவரை அழைக்க வேண்டும்? அது அவர்கள் இடம் அதில் அவர்கள் தாராளமாக வரலாம்.
இதை அவர் உடன் கலந்து கொண்ட கூட்டத்தில் நானும் அமைச்சர் ஆதவ்வும் சொல்லி உள்ளோம். மக்கள் வெள்ளத்தில் பாதிக்காமல் இருக்க திமுக, அதிமுக, தவெக என எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
நானும் ஒரு அமைச்சர் தான் நானும் கூப்பிடாமல் தான் செல்கிறேன். Protocol பார்க்காமல் மேயர் பிரியாவும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். மேயரை யாரும் புறகணிக்கவில்லை. அவருடன் இணைந்து தான் பணியாற்றி வருகிறோம் என தெரிவித்தார். சென்னையில் தவெகவினரை நிவாரண பணிகள் கூட செய்யவிடாமல் மேயர் பிரியா தடுப்பதாக எம்எல்ஏ பல்லவி குற்றம்சாட்டியிருந்த நிலையில் முதல்வர் விஜய், மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்ததை கூட அவர்கள் எனக்கு சொல்லாமல் என்னைதான் அவர்கள் புறக்கணிக்கிறார்கள் என பிரியா பதிலடி கொடுத்திருந்தார். இந்த பிரச்சினை விவாதமான நிலையில் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார்.





Click it and Unblock the Notifications
