திமுகவை சொன்னா பாஜகவுக்கு கோபம் வருது.. நயினார் சர்ச்சை பேச்சு.. ராஜ்மோகன் பகீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலில் தோல்வியடைந்ததை விமர்சிக்கும் வகையில், சட்டமன்றத்தில் அப்பாவை காணோம் என்று முதலமைச்சர் விஜய் விமர்சித்திருந்தார். இந்த விவகாரத்தில் விஜய் மற்றும் அவரின் தாய் குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அருவருக்கத்தக்க வகையில் விமர்சனம் செய்திருப்பது சர்ச்சையாகியுள்ளது. அவரது கருத்துக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில் அளித்துள்ளார்.

சென்னையில் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "நயினார் நாகேந்திரன் அநாகரீகமாக, அவதூறாக பேசியுள்ளார். அவர் ஒரு கட்சியின் தலைவர். ஆனால் ஏதோ தெருமுனை பேச்சாளரை போல மோசமாக பேசியுள்ளார். இது ஏற்புடையதே அல்ல. இதனை நான் கடுமையாக கண்டிக்கிறேன். தலைவர்கள் அருளோடும், பொருளோடும் பேச வேண்டும். இருக்கும் இடத்திற்கும், தாங்கள் வகிக்கும் பதவிக்கு ஏற்ப நாகரீமாக பேச வேண்டும். இது போல அவர்கள் இன்னும் 1,000 அநாகரீக, அவதூறு கருத்துகளை ஏவலாம்.

minister-rajmohan-slams-nainar-nagendran-over-controversy-speech-on-cm-vijay

நாகரீக அரசியல்

எப்படி இருந்தாலும் நாகரீக அரசியலில் வெற்றிநடை போட முதலமைச்சர் விஜய் சொல்லி கொடுத்துள்ளார். கடைசிவரை நாங்கள் நாகரீகமாகத்தான் பேசுவோம். எங்கள் பேச்சு, செயல்பாட்டில் மாற்றம் இருக்காது. நாகரீக அரசியலில் தான் பங்கெடுப்போம். அரசியலில் நிரந்தர நண்பர் இல்லை, எதிரி இல்லை என்று திமுக கூறி தேநீர் விருந்தில் எல்லாம் கலந்துள்ளனர். கேட்டால் நாடாளுமன்றத்தில் இருக்கை இடமாற்றம் பற்றி பேசியதாக சொல்கிறார்கள். அதைப்பற்றி தேநீர் விருந்தில் தான் பேச வேண்டுமா.

மறுபக்கம் பாஜகவினர் திமுகவினரை போல மாறி அநாகரீகமாக பேசத் தொடங்கியுள்ளனர். இதையெல்லாம் பார்க்கும்போது அரசியலில் பல பரபரப்பான விஷயங்கள் வெளிப்படும். மறைமுக நட்புகள் எல்லாம் வெளிப்பட போகிறது. இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். ரீல்ஸ் போடுவதை அதிமுக எடப்பாடி பழனிசாமி சிறுமையாக பேசுகிறார். மாற்றம் வரவேண்டும் என்று சமூகவலைதளங்களில் ரீல்ஸ் போட்டது மக்கள் தான். ஏற்றம் வரவேண்டுமென சமூகவலைதளங்களில் எழுதியது மக்கள்.

ஊழலை ஒழிக்க முடியும்

ஒரு மன்னராட்சி போல ஒரே குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியாக இருக்க கூடாது, அனைவரிடமும் மகிழ்ச்சி இருக்க வேண்டுமென நினைத்தது மக்கள். நாங்கள் சத்தமில்லாமல் சாதனை செய்து வருகிறோம். 717 டாஸ்மாக் கடைகளை மூடியது, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் உயர்த்தியது வரை ஒவ்வொரு நாளும் சாதனை செய்கிறோம். தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக ஊழலை ஒழிக்க முடியும் என்கிற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளோம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+