அமைச்சர் ராஜ்மோகன் அணிந்திருந்த வாட்ச் விலை சர்ச்சை.. அவரே கொடுத்த விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "எனது கையில் அணிந்திருக்கும் கடிகாரத்தின் விலை சுமார் ரூ.5,500 மட்டுமே. உண்மைக்குப் புறம்பான அவதூறுகளிலும் தனிப்பட்ட இழிவுபடுத்தல்களிலும் ஈடுபடுவோரை சட்டரீதியாக எதிர்கொள்வேன்" என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரோடு டெல்லி சென்றிருந்தார். தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ரூ. 5,000 கோடி சமக்ர சிக்ஷா நிலுவை நிதியை விடுவிக்கக் கோரி மத்திய கல்வி அமைச்சருடன் ஆலோசனை நடத்தினார் ராஜ்மோகன்.

Minister Rajmohan Warns of Legal Action Against Those Spreading False Claims About His Watch

ஆலோசனைக் கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அமைச்சர் ராஜ்மோகன் தனது கையில் அணிந்திருந்த வாட்ச் விலை சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளானது.

அமைச்சர் ராஜ்மோகன் அணிந்திருந்த கைக்கடிகாரத்தின் விலை சுமார் 20 முதல் 40 லட்சம் ரூபாய் அளவுக்கு இருக்கும் என்றும், அது மிகவும் விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்ச் என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. சாதாரண பொருளாதார பின்புலம் கொண்ட அமைச்சர் ராஜ்மோகன் பல லட்சம் மதிப்புள்ள வாட்ச் அணிந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

அதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் ராஜ்மோகன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். ராஜ்மோகன் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், "எனது கையில் அணிந்திருக்கும் கடிகாரத்தின் விலை சுமார் ரூ.5,500 மட்டுமே. கருத்து தெரிவிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் திட்டமிட்டு நிறம், உடை, அணிகலன் குறித்து பொய் பரப்பி இழிவுபடுத்துவது ஏற்புடையதல்ல.

உண்மைக்குப் புறம்பான அவதூறுகளிலும் தனிப்பட்ட இழிவுபடுத்தல்களிலும் ஈடுபடும் ஃபேக் நியூஸ் பேக்டரிகள் கூட்டத்தை சட்டரீதியாக எதிர்கொள்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+