விடாத ‘அம்மா’ உணவக பஞ்சாயத்து.. எட்டிக் கூட பார்க்காத எடப்பாடி! ஆர்பி உதயகுமாரை விளாசிய சேகர் பாபு.!
சென்னை: அம்மா உணவகம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினையும் அமைச்சர் சேகர்பாபுவையும் விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. முதல்வராக இருந்தபோது ஒருமுறையாவது எடப்பாடி பழனிச்சாமி அம்மா உணவகத்திற்கு சென்று ஆய்வு நடத்தி இருப்பாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை தேனாம்பேட்டையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்த சுமார் 21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாகவும் அறிவித்திருந்தார்.

இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்திருந்தார். அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்களை திமுக புறக்கணித்ததாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
எடப்பாடி பழனிச்சாமியின் இந்த கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர். இந்நிலையில் ஆட்சிக்கு வந்தவுடன் அம்மா உணவகங்களை அடித்து உடைத்ததோடு, மூன்றாண்டுகளாக கும்பகர்ண தூக்கத்தில் இருந்துவிட்டு, தற்போது அம்மா உணவகங்கள் மீது திடீர் அக்கறை காட்டும் திமுக அரசின் முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வதாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சென்னை மேயர், அமைச்சர் சேகர்பாபுவை பேட்டி அளிக்க வைத்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்தார்.
மேலும், அம்மா’ என்ற சொல்லைக் கேட்டாலே காதில் ஈயம் காய்ச்சி ஊற்றியதுபோல் பதறும் இந்த திமுக அரசின் ஆட்சியாளர்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்தே தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களை அடித்து நொறுக்கியும், பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையை மூன்றில் ஒரு பங்காகக் குறைத்தும் படிப்படியாக அம்மா உணவகங்களுக்கு மூடுவிழா நடத்தினர்.
அம்மா உணவகங்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் 90 சதவீதம் குறைக்கப்பட்டது; பழுதடைந்த உபகரணங்கள் சீர்செய்யப்படவில்லை; சென்னையில் சுகாதாரத் துறை மற்றும் மாநகராட்சிக்கு இடம் தேவை என்று பல அம்மா உணவகங்கள் மூடப்பட்டுவிட்டன. ” எனவும் கூறியிருந்தார். அம்மா உணவகம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினையும் அமைச்சர் சேகர்பாபுவையும் விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,:”கொரோனா பெருந்தொற்றின் போது 2019ஆம் ஆண்டு அம்மா உணவகத்தில் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முக ஸ்டாலின் முழுமையாக உணவு அளிக்க அனுமதி கேட்டார். ஆனால் அனுமதி தர முடியாது என அதிமுகவினர் கூறிவிட்டனர். அதன்பின் சென்னை நகரில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு 160 நாட்கள் தனது சொந்த செலவில் முதலமைச்சர் உணவு வழங்கினார்.
ஆனால் அப்போதைய முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி வெளியில் வரவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். கொளத்தூரில் ஒரு லட்சம் பேருக்கு ஆறு மாதம் உணவு வழங்கப்பட்டது ஆர்பி உதயகுமாருக்கும் சென்னைக்கும் தொடர்பில்லை என்பதால் இங்கு என்ன நடந்தது என்பது அவருக்கு தெரியாது.
சென்னை மேயராக பொறுப்பேற்ற பின் அம்மா உணவகத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. நானும் கூட நேரில் சென்று ஆய்வு நடத்தினேன். ஆனால் நான்காண்டுகள் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி என்றைக்காவது ஒருநாள் அம்மா உணவகத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளரா என்பதை அறிக்கையை வெளியிட்ட ஆர்பி உதயகுமார் தான் கேட்க வேண்டும். நல்ல திட்டத்தை யார் கொண்டு வந்தாலும் எங்கள் முதல்வர் அதனை செயல்படுத்துவார். 2021 ஆட்சிக்கு வந்த போது முன்னாள் முதலமைச்சர் புகைப்படம் இருந்த போதும் அரசு பணத்தை வீணாக்க வேண்டாம் என்பதற்காக அந்த புத்தக பைகளையே மாணவர்களுக்கு வழங்கியது திமுக” எனக் கூறினார்.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications