கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டத்துக்கு போறீங்களா! அப்ப இது உங்களுக்கு தான்! சேகர்பாபு போட்ட ரூல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை மாலை 4 மணிக்கு கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும் திமுகவினருக்கு சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான சேகர்பாபு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முன்கூட்டியே அதனை அறிந்துகொண்டால் கூட்ட நெரிசலில் இருந்தும் தேவையற்ற போக்குவரத்து நெரிசலில் இருந்தும் தப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Minister Sekarbabu issued an important announcement to the DMK members who will be attending the Karunanidhi birthday Meeting at Binny Mills

இதனிடையே அமைச்சர் சேகர்பாபு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு வருமாறு;

  • கூட்டத்தில் கலந்து கொள்ளும் தோழமை கட்சி தலைவர்கள் தலைமை கழக நிர்வாகிகள் அமைச்சர் பெருமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பெரம்பூர் பேரக்ஸ் ரோடு பின்னி மில் மெட்ராஸ் பங்களாவில் நுழைவாயில் 1-ல் வாகனத்தை நிறுத்தி விட்டு மேடைக்கு பின்பு உள்ள நுழைவாயிலில் வருகை தருமாறு கேட்டு கொள்கிறேன்.

• மாவட்ட கழக செயாலாளர்கள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் 2-வது நுழைவாயில் வழியாக வரவும். வாகனத்தை 10-வது நுழைவாயிலில் உள்ள பார்க்கிங்கில் விடவும்.

*திரு.வி.க.நகர், எழும்பூர் தொகுதியை சார்ந்த கழக தோழர்கள் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள பார்க்கிங் 12-ல் வாகனத்தை நிறுத்தி விட்டு 3-வது நுழைவாயில் வழியாக திடலில் வந்து அமரவும்.

• துறைமுகம், ராயபுரம், தொகுதிகளை சார்ந்தவர்கள் பாரதி கலை கல்லூரி வழியாக பேசின் பிரிட்ஜ் புளியந்தோப்பு நெடுஞ்சாலை பெரம்பூர் பேரக்ஸ் சாலை ஆட்டு இறைச்சி கூடம் எதிரில் உள்ள பார்கிங்கில் 12-வது நுழைவாயிலில் வாகனத்தை நிறுத்தி விட்டு 4-வது நுழைவாயில் வழியாக திடலில் வந்து அமரவும். · திருவொற்றியூர், R.K.நகர் பெரம்பூர் ஆகிய தொகுதியை சார்ந்த கழக தோழர்கள் சத்திய மூர்த்தி நகர் சாலை வழியாக மூர்த்திங்கர் சாலை, கணேசபுரம் சுரங்க பாதை வழியாக ஆட்டு இறைச்சி கூடம் எதிரில் உள்ள பார்க்கிங் 12-ல் வாகனத்தை நிறுத்தி விட்டு 4-வது நுழைவாயில் வழியாக திடலில் வந்து அமரவும்.

• திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர், வில்லிவாக்கம், ஆகிய தொகுதியை சார்ந்தவர்கள் அம்பத்தூர் OT, பாடி மேம்பாலம் குன்னூர் நெடுஞ்சாலை, குக்ஸ் ரோடு, ஸ்டீபன்சன் ரோடு வழியாக பார்க்கிங் 8 -ல் வாகனத்தை நிறுத்தி விட்டு 5-வது நுழைவாயில் வழியாக திடலில் வந்து அமரவும்.

* காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை மேற்கு மாவட்டம், சென்னை தென்மேற்கு மாவட்டம், சென்னை தெற்கு மாவட்டம், ஆகிய மாவட்டங்களில் இருந்து வருகை தருபவர்கள் கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜி.என்.டி.சாலை, அண்ணா சாலை, சிம்சன் சாலை,ஈ.வெ.ரா.சாலை, ரித்தர்டன் சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக பின்னி மில் வாகனம் நிறுத்தும் இடத்திற்கு 8-வது நுழைவாயிலில் வாகனத்தை நிறுத்தி விட்டு 6-வது நுழைவாயில் வழியாக திடலில் வந்து அமரவும்.

*கொளத்தூர், மாதவரம் தொகுதியை சார்ந்த கழக தோழர்கள் மூலக்கடை மாதவரம் நெடுஞ்சாலை, முரசொலி மாறன் மேம்பாலம் பெரம்பூர் நெடுஞ்சாலை, ஸ்டீபன்சன் சாலையில் உள்ள பார்க்கிங் 8-ல் வாகனத்தை நிறுத்தி விட்டு 7-வது நுழைவாயில் வழியாக திடலில் வந்து அமரவும்.

*ஸ்டீபன்சன் சாலையில் உள்ள 9-வது பார்க்கிங் இரு சக்கர வாகனத்திற்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. பார்க்கிங் எண் 11 அவசர தேவைக்கும் வெளியில் செல்வதற்கும் பயன்படுத்த ஒதுக்கப்பட்டுள்ளது.

* நிகழ்ச்சிக்கு வாகனத்தில் வருபவர்கள் தயவு கூர்ந்து சாலைகளில் வாகனத்தை நிறுத்தி இறங்காமல் சுமார் 13 ஏக்கர் நிலபரப்பில் அமைக்கப்பட்டுள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு கூட்ட அரங்கிற்கு நடந்து வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+