சி.எம்.டி.ஏ. வரலாற்றிலேயே இது முதல்முறை! வேற லெவலுக்கு மாறப்போகும் சென்னை! சேகர்பாபு பெருமிதம்!
சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் வரலாற்றில் இல்லாத வகையில் மேம்பாட்டுப் பணிகள் வேகப்படுத்தப் பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கிரிக்கெட் மைதானம், டென்னிஸ் கோர்ட், ஜிம், ஈசிஆரில் 5 கிமீ தூரத்துக்கு சைக்கிளிங் செல்ல தனி மிதிவண்டி பாதை என ஏராளமான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது எனக் கூறுகிறார்.

சென்னையின் புதிய அடையாளங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் அமைச்சர் சேகர்பாபு இது குறித்து கூறியிருப்பதாவது;
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளையும் முதலமைச்சர் விரைவாக செயல்படுத்த வேண்டுமென்ற உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் 50 இடங்களையும் நேரடியாக சென்று கள ஆய்வு செய்ய முடிவு செய்து 22 இடங்களில் கள ஆய்வு செய்திருக்கின்றோம்.
கோயம்பேடு பாலத்திற்கு கீழே இருக்கின்ற நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் இயற்கை வனப்புடன் பூங்கா அமைப்பதற்கு முடிவெடுத்திருக்கின்றோம்.
அதேபோல, சென்னை, தியாகராய நகர், சோமசுந்தரம் விளையாட்டு மைதானத்தில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பளவில் கிரிக்கெட் விளையாடுவதற்கு என்று தனி மைதானம், டென்னிஸ் கோர்ட் மற்றும் பூங்கா வசதி, உடற்பயிற்சி கூடம் போன்றவற்றை ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டிருக்கின்றோம்.
அதன் தொடர்ச்சியாக சென்னை, மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் அருகிலுள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் உள் விளையாட்டு அரங்கம் மற்றும் ஒரு மினி விளையாட்டு மைதானத்தை உருவாக்க திட்டமிட்டிருக்கின்றோம்.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் வரலாற்றில் இதுபோன்று மேற்கொள்ளப்படுகின்ற மேம்பாட்டுப் பணிகள் உடனடியாக துரிதப்படுத்தக்கூடிய நடவடிக்கை திமுக ஆட்சியில் தான் நடந்திருக்கின்றன.

இவைகள் இல்லாமல் அறிவிக்கப்பட்டிருக்கின்ற மெகா திட்டங்கள் நம்முடைய சென்னை தீவுத்திடலில் உள்ள சுற்றுலா பொருட்காட்சியில் உள் விளையாட்டு அரங்கம் அமைத்தல், கிழக்கு கடற்கரை சாலையிலே 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு மிதிவண்டி பாதை அமைத்தல், மகாபலிபுரத்தில் பேருந்து நிலையம் அமைத்தல் போன்ற பணிகளும் இதில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications