மதுரை சித்திரை திருவிழா! பக்தர்களுக்கு எல்லா வசதிகளும் பக்காவாக உள்ளன! அமைச்சர் சேகர்பாபு பதில்!
சென்னை: உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாண நிகழ்வுக்கான எல்லா முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் முன்வைத்த கோரிக்கை தொடர்பாக பதிலளித்து பேசிய அவர் இதனைக் கூறினார்.
இதேபோல் கள்ளழகர் வைகை ஆற்றில் நிகழ்ச்சிக்கு 3,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சட்டசபை கூட்டம்
மதுரையில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழா குறித்தும் மீனாட்சியம்மன் திருக்கல்யாண நிகழ்வு பற்றியும் சட்டசபையில் திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை வைக்கும் விதமாக பேசினார். அப்போது குறுக்கிட்டு பதிலளித்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யான நிகழ்ச்சி மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கான எல்லா முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கூறினார்.

அமைச்சர் பதில்
மதுரையில் 20 இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் இதே போல் 40 இடங்களில் மொபைல் ஆம்புலன்சுகளும் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிகளுக்கு 10 லட்சம் பக்தர்கள் வரை திரள்வார்கள் என ஆர்.பி.உதயகுமார் பேசியதை சுட்டிக்காட்டிய அமைச்சர் சேகர்பாபு, 3,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.

தனி அதிகாரி
மேலும், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜனும், மூர்த்தியும் இதற்கான ஏற்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார். அதேபோல் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் பக்தர்களுக்கு பக்காவாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்ற தகவலையும் வெளியிட்டார். மேலும், ஒரு தனி ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரையே இந்துசமய அறநிலையத்துறை சார்பில் அங்கு பணியமர்த்தியுள்ளதாக கூறினார்.

பாஜக கோரிக்கை
இதனிடையே 10 நாட்களுக்கு முன்னர் மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்த பாஜக மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன், மீனாட்சியம்மன் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை பட்டியலை அளித்தது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications