நான் வணங்கும் ஐயப்பன் மீது சத்தியம்... நகைகளை உருக்குவதில் முறைகேடு நிகழாது -சேகர்பாபு திட்டவட்டம்
சென்னை: ஐயப்பன் மீது சத்தியமாக கோயில் நகைகளை உருக்குவதில் முறைகேடு நிகழாது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள வள்ளலார் ராமலிங்கம் அடிகளாரின் நினைவு இல்லத்தை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

திருக்கோயில்களுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டு பயன்பாடின்றி இருக்கும் நகைகளை கணக்கிட உள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகாலமாக கோயில்களுக்கு காணிக்கையாக வந்த நகைகள் அப்படியே தேங்கிக்கிடப்பதாக கூறிய அவர், தெய்வ வழிபாட்டுக்கு பயன்படும் நகைகளை மட்டும் கணக்கிட்டு தெய்வங்களுக்கு பயன்படுத்த உத்தேசித்துள்ளதாக கூறியிருக்கிறார்.
தெய்வ வழிபாட்டுக்கு தேவைப்படாத நகைகள் மற்றும் உடைந்த நகைகளை மத்திய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலைக்கு அனுப்பி வைத்து தங்கக்கட்டிகளாக உருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
கோயில் நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றும் விவகாரத்தில் இம்மியளவு கூட தவறு நிகழாது என்றும் இது தான் வணங்கும் ஐயப்பன் மீது சத்தியம் எனவும் உறுதியிட்டார் அமைச்சர் சேகர்பாபு. கோயில்நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றும் நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அமைச்சர் சேகர்பாபுவின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தங்கக்கட்டிகளை வைப்பு நிதியாக வைத்து அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையை முழுமையாக கோயில் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும் இந்த திட்டம் முழுக்க முழுக்க வெளிப்படைத்தன்மையோடு செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்துள்ளார்.
கோயில் நகைகளை தங்கக்கட்டிகளாக மாற்றும் திட்டத்தை சென்னை, திருச்சி, மதுரை என 3 மண்டலங்களாக பிரித்து அதை செயல்படுத்துவதற்கு நீதிபதிகளை நியமித்துள்ளதாகவும் கூறினார். திருப்பதி கோயிலில் கூட இந்த நடைமுறை தான் பினபற்றப்படுவதாகவும், தமிழகத்தில் கடந்த 1977-ம் ஆண்டு முதல் இந்த நடைமுறை பின்பற்றப்பட்ட நிலையில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தான் இது கைவிடப்பட்டதாக அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.
மதத்தை, இனத்தை வைத்து அரசியல் பேசக்கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் கோயில் நகைகளை பயன்படுத்தாமலே வைத்திருந்தால் யாருக்கு என்ன லாபம் கிடைத்துவிடப்போகிறது எனவும் வினவியுள்ளார்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications