ஜூன் 1ஆம் தேதி முதல் 12 வரை பத்தாம் வகுப்பு தேர்வு.. கால அட்டவணை வெளியீடு
சென்னை: ஜூன் 1ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு தேர்வு நடைபெறும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் முதல் வாரத்திற்குள் பிளஸ் 2, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா பாதிப்பால் பள்ளிகள், கல்லூரிகள் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் மூடப்பட்டுவிட்டது.

எனினும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஓரிரு தேர்வுகள் மட்டுமே பாக்கியிருந்ததால் அவை நடத்தி முடிக்கப்பட்டது. 10ஆம் வகுப்புகளுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டன.
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படும் என பரவலாக பேசப்பட்டது. ஆனால் அரசோ அனைத்திற்கும் 10ஆம் வகுப்பு தேர்வு அடித்தளம் என்பதால் நிச்சயம் தேர்வு நடத்தப்படும் என்றது.
இந்த நிலையில் வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்த தேர்வு 12-ஆம் தேதி முடியும் என தெரிவித்துள்ளார்.
மார்ச் 24-ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு ஜூன் 4-இல் தேர்வு நடத்தப்படும். 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் மே 27 இல் தொடங்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
10ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை
- ஜூன் 1- மொழிப்பாடம்
- ஜூன் 3- ஆங்கிலம்
- ஜூன் 5- கணிதம்
- ஜூன் 6- விருப்பப் பாடம்
- ஜூன் 8- அறிவியல்
- ஜூன் 10- சமூக அறிவியல்
- ஜூன் 12- தொழிற்கல்வி (வொகேஷனல்)
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications