அமைச்சர் செங்கோட்டையன் அண்ணன் மகன் செல்வம் திமுகவில் இணைந்தார்! பரபர குற்றச்சாட்டு
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அதிமுக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் அண்ணன் மகன் செல்வம் இன்று திமுகவில் இணைந்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அதிமுக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் உடன் பிறந்த அண்ணன் கே.ஏ.காளியப்பனின் மகன் செல்வம் இன்று திமுகவில் இணைந்தார். அவருடன் மற்றும் கோபி கே.ஈ.கதிர்பிரகாஷ், கோபி ஆர்.துரைசாமி ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.

திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வம், "கடந்த 45 ஆண்டுகளாக என் தந்தையும், கடந்த 30 ஆண்டுகளாக நானும் அதிமுகவில் அமைச்சர் அவர்களுக்காக கோபி தொகுதியில் பணியாற்றி உள்ளோம். கோபி தொகுதியில் பணியாற்றிய தொண்டர்களுக்கு பல நல்ல விஷயங்களை செய்து கொடுக்க இயலவில்லை என்ற காரணத்தால், நாங்கள் எங்கள் அமைச்சரிடம் இருந்து விலகி இன்றைய தினம் திமுகவில் இணைந்திருக்கிறோம்.
கோபி தொகுதியிலேயே நலதிட்ட பணிகள் சிறப்பாக நடத்திருக்கின்றன. கட்சி தொண்டர்களை கையாள்வதில் குறைபாடுகள் இருக்கின்றன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்தது திமுக ஆட்சி தான் அமையும் என்று இங்குள்ள தொண்டர்கள், புதிய வாக்காளர்கள் உள்பட அனைவரும் எண்ண ஓட்டத்தில் இருக்கிறார்கள். குடும்பத்தில் (பெரியப்பா செங்கோட்டையன்) எங்களுக்குள் தனிப்பட்ட முறையில் எந்த விதமாக கருத்து வேறுபாடும் இல்லை. பல குறைபாடு இருக்கிறது. ஆட்சியிலும் பல குறைபாடு இருக்கிறது,.
கொரோனா அச்சுறுத்தலால் அதிக தொண்டர்கள் திமுகவில் இணைய முடியவில்லை. ஆனால் கூடிய விரைவில் பலர் திமுக கட்சியில் இணைவார்கள். எங்களை நம்பியுள்ள தொண்டர்களுக்கு நன்மைகளை செய்ய திமுகவில் இணைந்திருக்கிறோம். அதிமுகவில் அடிமட்ட தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளார்கள் என்றார்.
-
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு












Click it and Unblock the Notifications