செந்தில் பாலாஜி அமைச்சரான 24 மணி நேரத்தில்.. பெரிய ஆக்சன்! தங்கம் மாதிரி அறிவிப்பு! எல்லாம் மாறுதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி.. மின்சார மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சரான 24 மணி நேரத்தில் முக்கியமான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார். பல நாட்களாக டாஸ்மாக்கில் இருந்து வந்த பிரச்சனை ஒன்றை தீர்க்கும் வகையில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதன்படி டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு Bill வழங்கும் நடைமுறை. சோதனை அடிப்படையில் முதற்கட்டமாக ராணிப்பேட்டையில் உள்ள 7 கடைகளில் இப்பணி தொடங்கி உள்ளது. டாஸ்மாக் கடைகளின் செயல்பாடுகளை கணினிமயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த பில்லிங் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

senthil balaji tasmac

டாஸ்மாக் கடைகளில் உள்ள விற்பனையாளர்கள் கையடக்க ஸ்கேனர் மூலம் ஒவ்வொரு பாட்டிலிலும் உள்ள கலால் வரியுடன் கூடிய லேபிள்களை ஸ்கேன் செய்து பில் ரசீதுகளை வாடிக்கையாளரிடம் வழங்குகின்றனர்.

மதுபாட்டில்களை ஸ்கேன் செய்தால், அந்த பாட்டில் எங்கே வாங்கப்பட்டது, எந்த தேதியில் வாங்கப்பட்டது, இது எந்த பேட்ச்சை சேர்ந்தது, மதுபான ஆலையில் இருந்து எப்போது வெளியே கொண்டு வரப்பட்டது போன்ற பல்வேறு விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.

செந்தில் பாலாஜி அமைச்சர்: பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே தமிழ்நாடு அமைச்சரவை நேற்று முதல்நாள் மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்த நிலையில் அவரின் பதவி பறிக்கப்பட்டது. 471 நாட்களுக்கு பின் அவர் சிறையில் இருந்து பெயிலில் விடுதலை ஆனார்.

இந்த நிலையில் செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் உள்ளிட்டவர்கள் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்று உள்ளனர். இத்தனை நாட்கள் செந்தில் பாலாஜி வருகைக்காக முதல்வர் ஸ்டாலின் காத்திருந்ததாக கூறப்படுகிறது.

செந்தில் பாலாஜி வெளியே வந்ததும் அமைச்சரவை மாற்றம் வைத்துக் கொள்ளலாம் என்று ஸ்டாலின் சமீபகாலமாக கட்சி மூத்த நிர்வாகிகளிடம் சொல்லி வந்துள்ளார். அவரது ரிலீசுக்காகத்தான் அமைச்சரவை மாற்றமும், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி உயர்வும் தள்ளிப்போனது. செந்தில் பாலாஜி வரட்டும். அதற்கு ஏற்றபடி அமைச்சரவை மாற்றங்களை செய்யலாம் என்று தாமதம் செய்ததாக கூறப்பட்டது. செந்தில் பாலாஜி நம்பிக்கைக்குரிய நபர். அதனால் அவருக்கான வாய்ப்பை ஸ்டாலின் மறுக்க மாட்டார். அவர் வருகைக்காகவே ஸ்டாலின் காத்து இருந்தார் என்று கூறப்பட்டது. அவர் வந்த நிலையில்.. அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

செந்தில் பாலாஜி உள்பட 4 பேர் நாளை அமைச்சர்களாக சேர்க்கப்பட்ட நிலையில் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே ராமச்சந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் மஸ்தான் வசம் இருந்த சிறுபான்மையினர் துறை சா.மு.நாசருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

அமைச்சர் ராமச்சந்திரன் வசம் இருந்த சுற்றுலாத்துறை ஆர்.ராஜேந்திரனுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அமைச்சர் பொன்முடி வசம் இருந்த உயர்கல்வித்துறை முனைவர் கோவி.செழியனுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

இதற்கு முன் முத்துச்சாமியிடம் கூடுதல் பொறுப்பாக மது விலக்கு இருந்தது. தங்கம் தென்னரசுவிடம் மின்சாரம் இருந்தது. இரண்டும் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான்

அமைச்சர் செந்தில் பாலாஜி.. மின்சார மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சரான 24 மணி நேரத்தில் முக்கியமான பில்லிங் நடைமுறையை கொண்டு வந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+