செந்தில்பாலாஜி தம்பிக்கு வருமான வரித்துறை 2 முறை சம்மன்! ஆஜராகாத அசோக்! எங்கே இருக்கிறார்?
சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமாருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து ஐடி அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் மூளையாக செயல்படும் அவரது தம்பி அசோக்குமார் வீடு உட்பட 40 இடங்களில் கடந்த மே மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை நடத்தச் சென்ற போது தான் அசோக்குமார் இல்லம் முன்பாக பெண் ஐடி அதிகாரியை செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் சுற்றி வளைத்தனர்.

அதேபோல் அதிகாரிகள் சென்ற கார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் விசாரணைக்கு வருமாறு 2 முறை வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியும் அதனை அசோக் குமார் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. இதனால் அடுத்ததாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என வருமான வரித்துறை தரப்பில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியில் அசோக்குமார் எங்கு தான் இருக்கிறார் என்ற வினாவும் எழுந்துள்ளது. சொந்த அண்ணன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தருணத்தில் கூட அசோக்குமாரை எங்கேயும் பார்க்க முடியவில்லை.
அதேபோல் கோவை கண்டனப் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளிலும் அசோக் குமார் தலைகாட்டவில்லை. அசோக்குமாரை பொறுத்தவரை செந்தில்பாலாஜியின் நிழல் போல் அவரது கண் அசைவுகளுக்கு ஏற்பவும், எண்ணவோட்டங்களுக்கு ஏற்பவும் காரியமாற்றக் கூடியவர்.
அசோக்குமார் விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பதற்கு காரணம் அவர் கட்டி வரும் புது வீடு தான். பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் அந்த வீட்டால் தான் விணையே வந்திருப்பதாக கருதுகிறார் அசோக்குமார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications