கோயில், மசூதி, சர்ச்களில் பாரபட்ச மின் கட்டணமா.. தவறான தகவலை சொல்லாதீர்கள்: செந்தில் பாலாஜி
சென்னை: வழிபாட்டு தலங்களான கோயில், மசூதி, சர்ச்களில் மின் கட்டணம் பாகுபாடோடு வசூலிக்கப்படுவதாக நெட்டிசன் ஒருவரது குற்றச்சாட்டை அமைச்சர் செந்தில் பாலாஜி மறுத்துள்ளார்.
மின்சார துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி தான் பொறுப்பேற்றது முதல் ட்விட்டரில் வரும் மின்சார வாரியம் தொடர்பான புகார்களுக்கு பதில் அளித்து வருகிறார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் புகார் கூறிய போதும் வீட்டு சர்வீஸ் எண்ணை கொடுக்குமாறு கேட்டிருந்தார்.
ஆனாலும் சீமான் அந்த எண்ணை கொடுக்கவில்லை, இது குறித்து மீண்டும் மீண்டும் செந்தில் பாலாஜி நினைப்படுத்திக் கொண்டே இருந்தார். அந்த வகையில் நேற்றைய தினம் அமைச்சர் செந்தில் பாலாஜியை டேக் செய்து நெட்டிசன் ஒருவர் புகார் அளித்திருந்தார்.

மின்கட்டண விகிதம்
அந்த புகாரில் தமிழகத்தில் மின் கட்டண விகிதம் என குறிப்பிடப்பட்டிருந்தது. மசூதிகளில் மின்கட்டணம் ஒரு யூனிட்டிற்கு 2.85 ரூபாயும், சர்ச்சுகளில் மின் கட்டணமாக ஒரு யூனிட்டிற்கு ரூ 2.85 ம் வசூலிக்கப்படுகிறது. ஆனால கோயில்களில் மட்டும் ஒரு யூனிட்டுக்கு ரூ 8 வசூலிக்கப்படுகிறது.

மதசார்பின்மை
இது இந்தியாவில் மதசார்பின்னை சித்தாந்தம் போல!. புல்டோசரை ஏற்றினால் ஒருவருக்கு சுப்ரீம் கோர்ட் நினைவுக்கு வருகிறது. அது போல் அதே சுப்ரீம் கோர்ட் ஹிஜாப் அணியக் கூடாது என்றால் குரான் நினைவுப்படுத்தப்படுகிறது. மசூதி தனியார் சொத்து என்றால் எதற்காக அரசு மவுல்விக்கு நிதி செலுத்துகிறது?

கோயில்கள்
ஒரு வேளை கோயில்கள் அரசு சொத்தாக இருந்தால் அங்கு பணியாற்றும் பூசாரிகளுக்கு ஏன் அரசு சம்பளம் கொடுப்பதில்லை. இதை இந்த தேசம் அறிய விரும்புகிறது. இந்த பாகுபாட்டை ஒவ்வொரு இந்துக்களுக்கும் பகிருங்கள் என அந்த நெட்டிசன் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் பதில்
இதை அமைச்சர் செந்தில் பாலாஜி மறுத்துள்ளார். இது குறித்து செந்தில் பாலாஜி தனது தொடர் ட்வீட்டில் பொது வெளியில் இது போன்று தவறான தகவல்களை பகிராதீர்கள். கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவை வழிபாட்டு தலங்களின் கீழ் எந்த பாகுபாடும் இல்லாமல் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நீங்கள் சொல்வது தவறு
இந்த வழிபாட்டு தலங்களுக்கு குறைந்தபட்சமாக ஒரு யூனிட்டிற்கு ரூ 5.75 வசூலிக்கப்படுகிறது. இரு மாதங்களுக்கு முதல் 120 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ 2.90 மானியத்தையும் தமிழக அரசு கொடுக்கிறது. இதனால் இந்த மானிய மின் கட்டணமும் முதல் 120 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டிற்கு ரூ 2.85 மின் கட்டணமும் தனித்தனியாக பில் போடப்படும். அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் பாரபட்சம் ஏதும் இன்றி ஒரே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நீங்கள் குற்றம்சாட்டியது போல் எந்த வழிபாட்டு தலங்களிலும் ஒரு யூனிட்டிற்கு ரூ 8 மின்கட்டணமாக வசூலிக்கப்படுவதில்லை என செந்தில் பாலாஜி விளக்கியுள்ளார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications