‘ஆட்டுக்குட்டி’ ஓட்டுக்கு ஆயிரம்! நேர்ல வாங்க பேசிக்கலாம்..அண்ணாமலையிடம் தேதி கேட்ட செந்தில் பாலாஜி!
சென்னை : அரவக்குறிச்சி தொகுதியில் ஆயிரம் ரூபாய் கொடுத்தும், பாஜக மாநில தலைவராக இருந்தும் தோல்வியடைந்த விரக்தியில் அண்ணாமலை திமுக குறித்து அவதூறாக பேசி வருவதாக தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் சுமார் 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயுத தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். மேலும் மத்திய அரசின் அழுத்தம் காரணமாக கட்டண மாற்றம் எனவும் அவர் கூறினார்.
இதனிடையே தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவித்திருப்பதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார். இதுதொடர்பாக பேசிய அவர்,"தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா?" என கூறியிருந்தார்

விரக்தியில் அண்ணாமலை
இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் ஆயிரம் ரூபாய் கொடுத்தும், பாஜக மாநில தலைவராக இருந்தும் தோல்வியடைந்த விரக்தியில் அண்ணாமலை திமுக குறித்து அவதூறாக பேசி வருவதாக தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," நான் நேர்மையானவர். என்னுடைய சம்பளத்தில் சேர்த்து வைத்த ஆட்டுக்குட்டிகள் தான் இருக்கிறது என்கிறார்.

ஆட்டுக்குட்டி
அவ்வாறு ஆட்டுக்குட்டி மேய்த்து கிடைத்த பணத்தில் அரவக்குறிச்சி மக்களுக்கு ஒரு வாக்குக்கு அண்னாமலை ஆயிரம் ரூபாய் கொடுத்தது எப்படி? மக்களை ஏமாற்றி வரக்கூடிய சூழலில் அவரை அப்படியே அடையாளம் தெரியாமல் மக்கள் திருப்பி அனுப்பினார்கள். அந்தக் கோபத்தின் அடிப்படையில் தான் பாஜக அண்ணாமலை பேசி வருகிறார். தற்போது பாஜகவினர் தமிழகத்தில் மின்சார கட்டண உயர்வு குறித்து பேசி வருகின்றனர்.

குற்றச்சாட்டுகள்
மற்ற மாநிலங்களிலும் தமிழகத்திலும் உள்ள மின்சார கட்டணம் குறித்து நான் அண்ணாமலையுடன் நேருக்கு நேர் அமர்ந்து விவாதிக்க தயார். எப்போது வேண்டுமானாலும் கேட்டு சொல்லுங்கள் நான் விவாதிக்கிறேன். மின்சார கட்டணம் தொடர்பாக அவர் சொல்லக்கூடிய கருத்துக்கள் குற்றச்சாட்டுகள் என அனைத்துக்கும் பதிலளிக்க தயாராக இருக்கிறேன் அவர் சொல்வது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் என்பதை நான் நேரிலேயே நிரூபிக்க தயார்.
Recommended Video

பதிலளிக்க தயார்
பாஜக ஆளும் மாநிலங்களிலும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஆனால் அது பற்றி எல்லாம் அண்ணாமலைக்கு கவலை இல்லை மின்கட்டணம் தொடர்பாக போராட்டம் நடத்தும் அவர்கள் கேஸ் பெட்ரோல் விலை உயர்வு குறித்து போராட்டம் நடத்துவார்களா? கடந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக விரக்தியில் என் மீதும் திமுக அரசு குறித்தும் அண்ணாமலை அவதூறு பரப்பி வருகிறார்" என்றார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications