“நம்பர் சொல்லுங்க.. அப்போதானே என்னனு சொல்ல முடியும்” எச்.ராஜாவுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ரிப்ளை!
சென்னை : பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு வாகனத்தின் புகைப்படத்தை பகிர்ந்து, கிறித்தவமயமான TNEB எனப் பதிவிட்டார். அவர் பகிர்ந்த புகைப்படத்தில், ஒரு வாகனத்தில் ஜீஜஸ் டிராவல்ஸ் என்றும், ஒரு ஓரத்தில் TNEB என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்சார வாரிய வாகனத்தில் 'ஜீஜஸ் டிராவல்ஸ்' எனப் எழுதப்பட்டிருப்பதாக பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா சுட்டிக்காட்டி, திமுக அரசை அந்த ட்வீட்டில் விமர்சித்துள்ளார்.

எச்.ராஜாவின் இந்த ட்வீட்டுக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், "ஏதோ காரணங்களால், வாகன பதிவு எண்ணை மறைத்து புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் அண்ணன் எச்.ராஜா. வாகன எண் 0052 ஆக இருக்காது என நம்புகிறேன்.
வாகன எண்ணை கூறினால், அது ஒப்பந்த அடிப்படையிலான வாகனமா, ஊழியருடைய வாகனமா இல்லை வழக்கமான போட்டோஷாப் வேலையா என சொல்ல இயலும்" எனப் பதில் அளித்துள்ளார்.
மின்சார வாரியத்தின் அலுவலர்கள் பயன்படுத்தும் அரசு வாகனங்கள் 0052 எனும் பதிவு எண்ணைக் கொண்டவை. இந்த வாகனம் அந்த பதிவு எண்ணைக் கொண்ட அரசு வாகனமாக இருக்காது. மின் வாரியத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் சொந்த வாகனமாகவோ அல்லது ஒப்பந்த அடிப்படையிலான வாகனமாகவோ இருக்கலாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து வரும் பாஜகவினரை விமர்சிக்கும் வகையில், இது வழக்கமான போட்டோஷாப்பா என்பதையும் சொல்ல முடியும் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்துள்ள இந்த பதிலை திமுகவினர் மின்னல் வேகத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications