குட் நியூஸ்! “சீரான மின் விநியோகம்” இனி மின்வெட்டு இல்லை! அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட தகவல்.!

Subscribe to Oneindia Tamil

சென்னை : 796 மெகவாட் மத்திய தொகுப்பு மின்சாரம் வராததால், மின் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டது எனவும், தமிழக முதல்வர் ஸ்டாலினின் சீரிய நடவடிக்கையால், இன்று மாலை முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக தலைதூக்கியுள்ள மின் வெட்டு பிரச்சனையால், பொதுமக்கள் மிகவும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகினர். இரவு நேரங்களில் தூங்க கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

மின்வாரிய ஊழியர்களை தாக்கும் அளவுக்கு மின் வெட்டால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், இதற்கான காரணம் தெரிவிக்கப்படாத நிலையில், நள்ளிரவில் மத்திய மின் தொகுப்பில் இருந்து மின்சாரம் கிடைக்காததால் மின் வெட்டு ஏற்பட்டதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

தமிழகத்தில் மின்வெட்டு

தமிழகத்தில் மின்வெட்டு

இது தொடர்பாக பேசிய செந்தில் பாலாஜி," மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய 796 மெகாவாட் மின்சாரம் கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்படவில்லை.இதன் காரணமாகவே 41 இடங்களில் மட்டும் மின் தடை ஏற்பட்டது. கடந்தகால அதிமுக ஆட்சியின் போதும் இதுபோன்ற மின்வெட்டு 68 முறை நடைபெற்றுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி

இருப்பினும் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை சமாளிக்க முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சீரான மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், மத்திய அரசு தினசரி வழங்க வேண்டிய நிலக்கரியை யும் போதிய அளவு வழங்கவில்லை. இதனால் தமிழகத்திற்கு 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
விரைவில் இந்த நிலக்கரி பெறப்படும்.: என்றார்.

மின் விநியோகம் சீரானது

மின் விநியோகம் சீரானது

இந்த நிலையில் தமிழகத்தில் மூன்று நாட்கள் இடைவெளிக்கு பிறகு இன்று மாலை முதல் மின் வினியோகம் சீரானது நன் பகல் நேரங்களில் மின் வெட்டு ஏற்பட்ட நிலையில் மாலை 5 மணி முதல் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மின்வெட்டு ஏற்படவில்லை. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் மின்வெட்டு சீராக உள்ளதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

ட்விட்டர் பதிவு

ட்விட்டர் பதிவு

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"796 MW மத்திய தொகுப்பு மின்சாரம் வராததால், மின் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டது. மாண்புமிகு முதல்வர் தளபதி @mkstalin அவர்களின் சீரிய நடவடிக்கையால், தகுந்த மாற்று ஏற்பாடுகளும், மாநில மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டும், இன்று மாலை முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+