வாட்ஸ் அப் குழுவில் நான் இருக்கிறேன்... பாதிப்பை எதிர்கொள்ள மின்சார வாரியம் தயார் -செந்தில்பாலாஜி
சென்னை: மழை வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள மின்சார வாரியம் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
மின் வாரியங்களுக்கு வரும் புகார்களுக்கான வாட்ஸ் அப் குழுவில் தானும், உயரதிகாரிகளும் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் நலன் கருதி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பிறகு தண்ணீர் வடிந்த பகுதிகளுக்கு மட்டும் படிப்படியாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னையில் மீண்டும் மழை கொட்டத் தொடங்கியுள்ளது.
நாளை பிற்பகல் வரை சென்னையில் கனமழை இருக்கக் கூடும் என்பதால் பாதிப்பும் அதிகம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே எதையும் எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 4,000 களப்பணியாளர்கள் இருப்பதாகவும் இதுமட்டுமின்றி 10 மாவட்டங்களில் 12,000 மின் வாரிய ஊழியர்கள் களப்பணியாற்றி வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார். மழையால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை பத்திரிகையாளர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவர்கள் உள்ளடங்கிய வாட்ஸ் அப் குழு ஒன்றும் தனியாக உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியிருக்கிறார்.
சென்னையில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வரும் அமைச்சர் செந்தில்பாலாஜி, புயல், மழை வெள்ளப் பாதிப்புகளை எதிர்கொள்வது பற்றி துறையின் உயர் அதிகாரிகளோடு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதேபோல் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையத்திற்கும் விசிட் அடித்து வருகிறார்.
பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மின்மாற்றிகள் இருப்பதை கவனத்தில் கொண்ட அவர், மழைக்கு பிறகு அதனை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியை அளித்திருக்கிறார். மின் விநியோகத்தை சீராக கொடுக்க உயர் அதிகாரிகள் முதல் களப்பணியாளர்கள் வரை கடுமையான உழைப்பைச் செலுத்திக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னையில் முகாமிட்டவாறே கோவை மற்றும் கரூர் மாவட்ட மழை பாதிப்பு நிலவரங்களையும் மாவட்ட நிர்வாகம் மூலம் அவர் கேட்டறிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications